பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

191


ஊதியத்திற்காக உழைக்காது உள்ளன்போடு முகம் மதுவை வளர்த்த பெருமையை,

'பிள்ளைமென் கனியே செல்வம் பெறுந்தவப் பலனே யெந்த
முள்ளகத் துயிரே மாமை யோங்கிய முகம்மதே'

7: 14

என்று அலிமா விருப்பத்தோடு விளிப்பதில் விளக்கிச் சொல்கிறார் உமறு.

'முகம்மதைக் கொன்றார்’ என்ற செய்தி செவிபுகுந்த வுடனே மயங்கி வீழ்ந்து,

"பூண்ட கலன்பல திசையுஞ் சிந்த
வேறியங் குழன்மா மேக மின்னென மேனி தேம்பிப்
பாரினிற் புரண்டே றுண்ட மயிலெனப் பதைத்து’

7:37

எழுந்து மைந்தன் அப்துல்லா வழிகாட்ட,
கமலப் பாத முதிரங்கொப் பளிப்பக் கானின்
மிதித் தலைந் திடுங்கொம் பொப்ப"

7:38

விரைவினில் நடந்துவந்து, கோட்டு வாய் நிழலில் வானோக்சி நின்ற முகம்மதுவைக் கண்டு,

'கண்ணினின் மணியே யெந்தங் கருத்துறு மறிவே காமர்
விண்ணினிற் குறைப டாமல் விளங்கிய மதிய மேயிம்
மண்ணினுக் கரசே நந்த மனைக்குறு செல்வ மேயெம்
புண்ணியப் பலனே யென்னப் பூங்கொடி யெடுத்து அனைத்தார்' [1]
வடிவுறு மேனி நோக்கி மாமதி வதநோக்கிஉடலுறும்
வடுக்கா னேனிங் குற்றவை யுரைப்பாய்'


  1. 1. சீறா, இலாஞ்சனை தரித்த படலம் 50