பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

193


மொழிகளை இம்மட்டும் நிறுத்துங்கள். இச்சொல் என் குடும்பத்தாருடைய செவியில் விழுந்தால் நீங்கள் அனைவரும் கொல்லப்படுவீர்கள் , வீணில் உங்கள் உயிர்களைப் பறிகொடுக்காமல் வீட்டை விட்டு, அகன்று போங்கள்" என்று கடுமையாகக் கூறினார் அலிமா. சூழ்ச்சி நிறைந்த நஸ்றானிகள் அலிமாவின் சினத்தின் முன் நிற்கத் திறனற்ற வராய் எழுந்து போய்விட்டார்கள்.

அலிமாவின் கடமையுணர்வும், பொறுப்புணர்வும் இந் நிகழ்ச்சியினால் தெளிவாகின்றன. பாலூட்டி வளர்க்கக் கொண்டு வந்த குழந்தையைப் பெரும் பொருளுக்கு விற்று வாணிகம் செய்யும் அத்தகைய இழிகுணம் படைத்தவரல்ல ஆகையால் அடுக்காய் வரும் துன்பங்களைக் கண்டு அஞ்சிய அலிமா 'தாயிடம் சேர்ப்பதே கருத்து’ என ஆரிதிடம் கூறினார். எனினும் மக்கமா நகர் செல்கையில் இரு கைகள் நீண்ட காட்சியைக் கண்ட அலிமா முகம்மதை இரண்டாவது முறையாக காணாமல் போக்கி விட்டாள். அவள் மனம் கலங்கி கண்ணீர் பெருக வாய் திறந்து அலறி. அழத் தொடங்கிப் புலம்பினாள்.

என்ன மாயமிங் கென்னென நெட்டுயிர்ப்பெறிந்து
வன்ன மென்மலர் கரநெரித் துதரத்தில் வைத்துத்
துன்னு பூங்குழல் விரிதரச் செவ்விதழ் துடிப்பக்
கன்னி மாமயில் கலங்கினர் புலம்பிக் கதறினர்."[1]

படியின் மீதினி லோடுவர் தேடுவர் பதறிக்
கடிதிற் கன்முழை முட்செறி பொதும்பினுங் கவிழ்ந்து
நெடிது நோக்துவர் செடியறக் கிளறுவர் நிகரில்
வடிவு றும்மக வேயெனக் கூவுவர் வருந்தி."[2]


  1. 1.சீறா இலஞ்சனை தரித்த படலம் 54, 60
  2. 2.சீறா இலஞ்சனை தரித்த படலம் 54, 60