பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196


பாத்திமா இறுதி மூச்சு விடும் முன் ஏந்தல் நபி (ஸல்) அவர்களைப் புகழ்ந்து, சலவாத்து ஒசி, ஈமான் உறுதியால் கலிமாவும் இயம்பி, இறையடி சேர்ந்தார்கள் என்று விளக்குகிறார் உமறுப்புலவர். பாத்திமா முகம்மது அவர்களின் சிறந்த வளர்ப்புத் தாயாக மட்டும் இல்லை. ஞானத் தாயாக வும் காட்சித் தருகிறார்கள் நபி. நாயகம் வளர்த்த தீன் இஸ்லாத்தையும் மேற் கொண்டு அது வளர, வாழ ஆசிகள் கூறி இறுதிநேரத்திலும் அறிவு நிலை தடுமாறாது 'தின்மிக வாழ்க’ என்று கூறி நற்சிந்தனை தெய்வச் சிந்தனையுடன் மறைந்த அவ்வுத்தமியின் உயர்ந்த உள்ளம் சமயத் தொண்டில் கொண்டிருந்த உறுதியை அவர்தம் இறுதிநிலை எடுத்து உரைக்கின்றது.

முகம்மது நபி (சல்) அவர்கள் பாத்திமாவுக்கு தானே இறுதிக் கடன்களைச் செய்தார். ஜனாசாவை கப்றில் வைத்த போது நபிகள் நாயகம் (சல்) அவர்கள் கப்றில் இறங்கி மையத்துக்கு அருகில் படுத்துக்கொண்டு முகத்தோடு முகம் வைத்துப் புலம்பி, தாயே! தங்களுக்கு அல்லாஹாத் த ஆல உன்னத பதவியைத் தருவானாக' என்று மனமுவந்து கூறி தங்கள் உடலில் போட்டிருந்த குப்பாயத்தால் (சட்டையால், அவர்கள் சடலத்தைப் போர்த்தினார்கள். உயர வந்து பின்னார் முதலில் தங்கள் கையால் மண்ணைத் தள்ளினார்கள்.

மேலங்கியைக் கழற்றி சடலத்தின் மீது போட்ட செயல் புதுமையானது. ஆதலின் அ ைஎவரும் நபிகள் நாயகத்திடம் அதற்குரிய காரணத்தை வினவியபோது நாயகம் தந்த விளக்கம், பாத்திமாவின் சமயத் தொண்டையும் அதன் பயனாய் அவர் பெறப்போகும் பிற ஏற்றங்களையும் எடுத்தியம்புகிறது. நபிகள் நாயகம் (சல்) கூறுகிறார். ,"நான் என் தாய்க்கு அருகில் படுத்தது, அவர்களை கப்று நெருக்காமல் இருப்பதற்காக; என் மேலங்கியைப் போர்த்தது அவர்கள் மேலான சுவர்க்கத்து உயர்ந்த சித்திரப்பூம் பட்டாடையை பெற்றுக் கொள்வதற்காக. நான் இவ்வாறு