பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

197


செய்யக் காரணப் ஹாஷிம் வமிசத்துப் பெண்களில் முதலில் ஈமான் கொண்டு முஸ்லீமானது பாத்திமா அவர்களே ஆகும்."

பெண்கள் சமய வளர்ச்சியிலும் ஈடுபாடு கொண்டு அதை வளர்த்தனர் என்பதற்குச் சான்றாய் நிற்கின்றார் அன்னை பாத்திமா,

அன்பாலும் அருளாலும் உயர்ந்து தாய்மை, இறைமை பண்புகளில் சிறந்த தாயார் மூவரைப் பெண்மை நலங்கள் விளக்கமுறப் பாடியுள்ளார் தமிழ்நாட்டுப் புலவர் உமறு.

கதீஜா பிராட்டியார் முசம்மது (சல்) அவர்களின் முதல் மனைவி.

காப்பியத் தலைவி கதீஜா நாயகிலைச் சித்திரச் செம்பொற் பாவையாய்ச் சித்திரிக்கின்றார் உமறுப்புலவர் நாயகியின் எழிலையும் ஏற்றத்தையும் புலப்படுத்தும் புலவருடைய உவமைகளும் உருவங்களும் அவர் தம் பேரறிவுக்குப் கற்பனையாற்றலுக்கும் சான்றுகளாய்த் திகழ்ந்தன.

கதீஜா நாயகி 'குறைஷியங் குலத்துக்கு ஒரு மணி; குவைலித்துக்கு இரு விழி; மறை திரைக் கடலில் அமுதெனப் பிறந்தவர்க்கு அணி என்று அறிமுகப்படுத்துகிறார் உமறுப்புலவர்.

வணக்கம், அறிவு, பொறை நல்லோர் இணக்கம், வறியோர் ஈயும் இரக்கம், நிறைந்த கற்பு ஆகிய பண்புகளைத் தன் பண்புகளாகப் பெற்றவர் கதீஜா என்கிறார் உமறு.குணக்கலை வல்லோர்கள் கூட கதீஜாவுக்கு இணையான இன்னொரு பெண்ணைத் தேர்ந்தெடுப்பது அரிது என்றும் கவிஞர் கூறுகிறார்.

தேன் கடலமுது,எண்திக்குகளில் திகழும் வரையமுது, வெண்மதியமுது, பெண்பாற் கடலமுது, சோதிமிக்க வான்கடலமுது ஆகிய உலகிலுள்ள எல்லா அமுதுகளும் ஒன்றாகக்