பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204


காதல் பிரிவு கனவுகள் . உணவு - வெறுப்பு - உறக்க மறைவு- உற்றவர் உறையாடல் ஒழிப்பு எல்லாவற்றையும் நிழற்படம் போல் சிந்தைக்கினிய காட்சிகளாகக் காட்டும் உமறு, 'மணம்புரி படல'த்தில் செம்மல் நபி ஊர்வலம் வருவதை எழுவகை நிலைப் பெண்கள் திசைகள் தோறும் நெருங்கியிருந்து கண்ட காட்சியையும் உலகக் காட்சியாகக் காட்டத் தவறவில்லை.

"மக்கமா நகருஞ் செல்வமும் வாழ
    மறைவலோ ரறனெறி வாழத்
தக்கமெய்ப் புகழுங் கிளைஞரும் வாழத்
    தரணிநாற் றிசையினும் வாழ"

நபி-நாயகம் (சல்) அவர்களும் கதீஜா நாயகியும் திருமணங் கொண்டு தன் மண- மனை வாழ்க்கையில் நனி திளைத்திருந்தனர்.

பொருட்செல்வியும் அறச்செல்வியுமாகிய பொற்புடைச் செல்வி கதீஜா அன்பும் அருளும் கொண்டு, கணவன் சாரியம் யாவினும் கை கொடுத்து மக்களைப்பெற்று மகிழ்ந்தினிது இருந்தார்.

புனிதர் முகம்மது தம் வழக்கப்படி ஹீராமலையில் போய்த் தனித்திருந்தார்கள். மக்களுக்குத் தலைவராகிய ஜிபுறயீல் தோன்றி ஒளிமயமான ஒப்பற்ற ஒரு சித்திரப்பூப் பட்டாடையை நபிகள் நாயகம் கைகளில் வைத்தார். அக்கணத்தில் உலகெலாம் ஒரு பேரொளி படர்ந்து ஒளி செய்தது. ஜிபுறயீல் நபிநாயகத்தை நோக்கி 'விண்டலம் பரவும் வேத நபியெனும் பட்ட நூம்பாற். கொண்டலேகுதாவின் நீந்தார்' என்று கூறி, மண்டலர் வாழ்த்தெடுப்ப செவ்வி யாரணம் புகறி' யென்றார். நபிகள் நாயகம் அவர்களோ 'எழுத்திலொன்று அறியேன், ஆதி ஒப்பரும் வேத மென்ப தோதினே னல்லன்' என்று கூறினார். ஜிபுறயீல் நாயகத்தை இறுகத் தழுவி 'இப்பொழுது ஒதுங்கள்’ என்றார். நபியோ வேதத்தினைக் கண்டும் கேட்டும் கற்றறிந்