பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

207


நபிகள நாயகம் (சல்) அவர்களின் நாயகிகள்

நபிகள் நாயகம் (சல்) மக்க மாநகரத்திலிருந்து மதின மாநகரத்திற்கு எழுந்தருளிய ஹிஜ்ரி மூன்றாம் ஆண்டில் இரண்டாம் கலீபாவும் அறிவிற் சிறந்த உத்தமருமாகிய உமறு கத்தாபு அவர்களின் மகள் அபுசாவைத் திருமணம் செய்து கொண்டார்.

அபுசா நாயகியை,

'அருந்த வத்தினி லீன்றெடுத் துவந்தபெண்ணரசு’

'கருந்த டங்கயற் கண்ணி’

'நறுமொழிக் கனி'

'வருந்து மெல்லிழைக் கொடி’

"மென் பிடி நடை மயில்’

'பொருந்து மார முது"

'குறைஷி யங்குலக் காவினி லுறைந்தகோ குலம்’

'பொறையு நீதியு மொழுக்கமும் விளைத்தபொன் நிலம்'

'உறையும் கற்பினுக் குறைவிடம்'

'ஒளிர் மணி' என்று சித்திரிக்கின்றார் உமறு.

குபீர் இருள் அறவே தொலைய தீன்பயிர் செழிப்புற்று ஓங்க உழைத்து வந்த முகம்மது நபி (சல்) அவர்களின் அறப்பண்புகளுக்கேற்ப, அருந்தவத்தினால் ஈன்றெடுத்த பெண்ணரசு பொறை நீதி, 'ஒழுக்கம் யாவும் ஒருங்கே அமையப்பெற்ற பொன் நிலம் என்றும், உறையும் கற் பினுக்கு உறைவிடம் என்றும் அபுசா நாயகியை விளக்கு முறையில் அவர்களுடைய பண்பு நலத்தையும் பாராட்டி மகிழ்கின்றார் புலவர்.

அதே ஆண்டில் உஸ்ைமா என்ற பெரும் பணக்காரரின் மகள் செயினபு நாயகியை நபிகள் நாயகம் மணம் செய்து கொண்டார். செயினபு நாயகியை எழிற் செல்வியாக, பொறைச்செழும் அமுதாகப் போற்றுகின்றார் புலவர்.