பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208

ஹிஜிரி நான்காமாண்டில் நபிகள் நாயகம் அபூவுமையாவுடைய செல்ல மகளாகிய உம்முசல்மா அவர்களைத் திருமணம் செய்து கொண்டார்.

நபிகள் நாயகம் (சல்) போருக்கெழும் ஒவ்வொரு முறையும் தங்கள் மனைவியரில் ஒவ்வொருவரையும் உடன் அழைத்துப்போதல் வழக்கம். முறைசீக்கு நகரத்திற்குச் செல்ல யாரை அழைத்துப் போகலாமென்று மனைவியரின் பெயர்களைக் குறித்துத் திருவுளச் சீட்டுப் போட்டுப் பார்த்தார்கள்,

“::............கரை போட்டுப்
பார்ப்பவினை பொருவிலாத
காரணத்தி னின்றதவ ஆயிஷா
வுடன் போகக் கண்டதன்றே” [1]

நாயகத்தின் மனைவியருள் சிறந்தவரும், அபூபக்கர் அவர்களின் அருமை மகளாருமாகிய உலக அன்னை ஆயிஷா அவர்களின் திருப்பெயர் வந்தது. எனவே ஆயிஷா நாயகி தோழிகளும் குற்றேவலாட்களும் புடை சூழப் புறப்பட்டார்.

“பொருவறிய வழகுமயி லாயிஷா
வெனுங் கொடியும் போனா ரன்றே” [2]

முறைசீக்கு நகரத்தை வெற்றி கொண்டபின், மதின மாநகரத்திற்குத் திரும்பும்போது நீரற்ற பாலைவனமாகிய புயிதா என்னுல் இடத்திற்கு வந்தபோது அன்னை ஆயிஷா தங்கள் தங்கை "நறுமேனி யினசுமா விடமிருந்து இரவல் வாங்கி அணிந்து வந்த மணிமாலிகை அறுந்து விழுந்து விட்டது.

  1. சீறா. முறைசீக்குப் படலம் 6.
  2. சீறா. முறைசீக்குப் படலம் 10, 34.