பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210


மாய்கின்றது தொழிலிவ்வுழை யெவ்வாறெனமனதது
ளாய்கின்றவர் மனையார் தடை யனைமேற்றுயில் செய்தார்." [1]

கிழக்கு வெளுத்தது. மணிவடமும் கிடைக்கவில்லை. நாயகம் அவர்கள் ஆயிஷாவிடம் வந்து 'உம்மாலல்லவா நாம் இந்தப் பாலைவனத்தில் தங்க நேர்ந்தது? பொழுது விடிந்தால் பஜ்றுத் தொழ உலுவுக்குத் தண்ணீர் அகப் படாதே. எல்லோரும் பஜ்றுத் தொழாமல் தடைபட்டு இருக்கக் காரணம் நீயல்லவா? உமது அறிவு ஏன் இப்படியாயிற்று' எனக் குறை கூறினார்கள்.

"மதிமுற்றிய வுபுபக்கர்த மகள் பாலவ ணெய்தி
யுதகத்தட மிலவித்தல முறையத்தொழு கையுமே
சிதயத்தவ நயினாரொடு செறிந்தாரையுந் ததைததா
யதியுத்தியு ளாயென்றறி வுணரக்குறை சொன்னார்.[2]

ஆயிஷா நாயகியின் இந்த அறியாமையாகிய செயல் வேறொரு பெரிய வரத்தினைப் பெற்றுத் தந்தது. நபிகள் நாயகத்திற்கு உலு செய்ய நீரில்லாத போது மண், அதுபோன்ற இன்னும் சில பொருள்களில் ஒன்றால் தயம்மம் செய்து தொழுதல் செய்யலாமென்றும், அதனுடைய விவரம் இன்னது என்றும் நபிகள் நாயகத்திற்கு அல்லாஹ"த் த ஆலா வேத வாக்கியம் இறக்கினான், ஜிப்றயீல் வந்து அதை அறிவித்தவுடன் அவ்வாறே அனைவரும் தொழுது முடித்தனர்.

முன்னே மணிமாலையைத் தவறவிட்டு பஜ்று செய் வதற்குத் தடை ஏற்படுத்தியதற்காகக் கடிந்து கொண்ட ஆயிஷா நாயகியைக் கண்டு நபிகள் நாயகம் அவர்கள் 'தயம்மம் செய்து தொழக் கட்டளை பிறந்தது ஆயிஷாவின் பொருட்டே'


  1. 1.நோ. முறைசிக்குப்படலம் 36, 37
  2. 2.நோ. முறைசிக்குப்படலம் 36, 37