பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

211

"செயிர் தீர்தர வணக்கத்தது செயலாகிய பின்ன

ரயில்வாளணி கரத்தோர்மறை யலர்வாண்முகநோக்கித்

தயமுஞ்செய்து தொழக்காண்டது தரைமாதர்கடிலத

மயிலாயிஷா பறச் க்தென நபி கூறினர்மாதோ" [1]

என்று பாராட்டிக் கூறினார்கள், பின்னர் மணிவடம் ஒட்டகத்தின் வயிற்றின் கீழிருந்து அகப்பட்டது. அனைவரும் புறப்பட்டு சில நாட்களில் மதின மாநகரம் வந்து சேர்ந்தார்கள்

முறைசீக்குப் போருக்கு ஆயிஷா நாயகியை அழைத்துச் சென்றதனால் வழிபாட்டிற்கு ஒரு புதிய முறை கிடைத்தது என்ற நிகழ்ச்சியை உமறுப்புலவர் முறைசீக்குப் படலத்தில் சுவைபட எடுத்துச் சொல்லும் திறம் நபிகள் நாயகத்தின் வரலாற்றை மட்டுமல்ல சமயத் தொண்டினை யும், அலர் நிலைநாட்டிய சமய முறைகளையும் தம் மனத்தில் எளிதாக வேரூன்றச் செய்கிறது.

முறைசீக் நகரத்திலிருந்து சிறைப்படுத்திக் கொண்டு வந்த பெண்களில் 'தருமந்திகழ் தாபித்தென வருமன்னர்' பங்காக 'திருவுங்குண நலனும்பெறு செயலும் பொறை நிறையு, முருவந்தமு முற' வந்தவள் பனூ முஸ்தலில் கூட்டத்தின் தலைவர் ஆரிது அவர்களின் மகள் ஜூ வைரியா அம்மையார். அறமென்னராகிய தாபித்து ஜூவைசியாவை அருட்டார்வையில் நோக்கி, 'எழில் நிரம்பியவள், கற்பு நிறைந்தவள், நேர்மையான ஒழுக்கமுடையவள், இவளை நாம் மனைவியாக ஏற்பது தகாது' எனக் கருதி, ஜூவைரியாவே உமக்குரிய விலையைக் கொடுத்து விட்டு விருப்பம் போல் செய்க' என விடை தந்தனுப்பினார். விரைந்து நபிகள் நாயகம் முன்வந்து தோன்றிய ஜூவைரியா சில பொளீகுமி னையா' என்று வேண்டி நிறைாள். அவள்


  1. 1. சீறா. முறைக்குப் படலம் 41.