பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212


"தோற்றம் நபிகள் நாயகத்தின் நெஞ்சத்தை ஈர்த்த செய்தியினை,

"வெல்லுஞ்சசி முகமும்வளை வில்லின்றர நுதலுஞ்

செல்லும்பிடி நடையுந்துவழ் சின்னஞ்சிறி திடையுஞ்

சொல்லுந்திரு மொழியும்மினை துள்ளுமபிணை விழியு

மல்லும்பொரு குழலுமிவை யெல்லாமுட லயர்த்த." [1]


"மோகத்துய ருடனேநினை வறியாவகை முழுது
மாகத்தினின் மீறபபுகழான்மைத்திற னயினார்
                             ......................"[2]

எனக் கூறும் உமறு, முகம்மது நபி அவர்களின் விடையையும்,

"கொலைவட்கர தாபித்தெனுங் குலமேலவர் தமக்கே

விலையாநிதி யுளதிந்துன துட்ன்மீட்குவன்விளங்கும்

பலனாம்படி நீயும்மினிப் பதிதோறினும்போய்ப்போ

யலையாவகை மகிழ்வாகவில் லவளாகுதியென்றார்." [3]

என்று பாடுகின்றார்.

அன்னை ஜூவைரியா அவர்கள் எதிர்பாராது தனக்குக் கிடைத்த இத்திருமணப் பெருமையை ஏற்று, அதன் காரணமாக இன்னும் இருளிலேயே இருக்கும் தங்கள் குலத்தவர் தொடர்பை அறுத்துக் கொண்டார். அத்துடன் தன் தந்தையிடபிருந்த மகப்பற்றையும் வெறுத்தார்.

'மறுத்தாள் குபிர் துடைத்தாடுயர் மதித்தாளறமதத்தைப்

பொறுத்தாளுட றழைத்தாண்மயிர் பொடித்தாள்புளகிதத்தா


  1. 1,சீறா, முறைசீக்குப் படலம் 54, 55, 56,
  2. 2.சீறா, முறைசீக்குப் படலம் 54, 55, 56,
  3. 3.சீறா, முறைசீக்குப் படலம் 54, 55, 56,