பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214


"வல்லவர் தூதிர் ரல்லா மறைமொழிப் படியேயன்றிக்

கல்லக ஞாலந் தன்னிற் கடிமணம் விரும்பேனென்றார்" [1]

தன்னுடைய திக்காஹ் குறித்து, அல்லா ஹூத் த ஆலா வேத வாக்கியம் இறங்கினாலன்றி தான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று செயினபு கூறி விட்டமையால், நபிகள் நாயகம் (சல்) அல்லாஹூத் த ஆலாவின் உத்தரவை எதிர்நோக்கி இருந்தார். ஜிப்றயீல் அல்லாஹாத் தஆலாவிட மிருந்து வேத வாக்கியத்தைக் கொணர்ந்து நபிகளிடம் கூறினார். நபிகள் நாயகம் தாங்களே நேரில் சென்று தேனினு மினிய இன்சொல் செயினபு வைக் கண்டார். ஒப்பில்லாத அழகும், உறுப்பிலக்கணமும் உடைய செயினபு நாச்சியார் அவரைக் கண்டு மனமகிழ்ந்து ஒருபுறம் நாணி நின்றார். நபிகள் நாயகம் அவர்கள் 'தென்றிகழ் மயிலை நோக்கி ஜிப்றயீல் கொண்டு வந்த நன்றிசேர் குறானா யத்தை நவின்றுமா ராயஞ் சொன்னார்'. சொன்ன அளவிலே, நபிகள் நாயகம் அவர்களின் மனைவியாக மனம் ஒன்றி அன்று முதல் கற்பிற் சிறந்த நாயகியாக மனம் பொருந்தி உலக அன்னையாகத் திகழ்ந்தார்.

தெய்வத் திருவருள் பெற்றிருந்த செயினபு நாச்சியார், மலக்குகள் சாட்சியாக இருந்து தெய்வத் திருமணம் செய்து கொண்டார் என்று காட்டும் உமறுப்புலவர் தீன் இஸ் லாத்தை நிறுவிய நபிகள் நாயகத்தின மனைவியையும் அரிய பண்புகள் அனைத்தும் நிரம்பிய குணக் குன்றாகக் காட்டுகிறார்.

திருமணத்தன்று அபூதல்காவின் மனைவி உம்முசுலைம் கொடுத்தனுப்பிய கொஞ்சம் ஈத்தம் பழத்தொடு நெய்யும். தயிரும் விட்டுப் பிசைந்து வைத்திருந்து ஒரு பாத்திரத்தைக் கொண்டு பல அசுஹாபிகளை விருத்துண்ணும்படி செய்தார் நபிகள் நாயகம். விருந்துண்ட பிறகு அசுஹாபி


  1. 1. சீறா. செயினபு நாச்சியார் கலியாணப் படலம்