பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

219


நபிகள் நாயகம் அவர்கள் அம்மார் குடும்பத்தினர் படும் துன்பத்தை கேட்டு அவ்விடம் சென்று தரையில் கிடந்த நால்வரையும் கண்டு. நீங்கள் இப்பெருந்துன்பத்தைப் பொறுத்துக் கொண்டதால் உங்களுக்குச் சுவர்க்கப் பதவியை அல்லாஹுத்த ஆலா கொடுத்து விட்டான்." என்று கூறிச் சென்றார்.

"மின்னிய துயரினைப் பொறுத்த மாட்சியாற்
பொன்னுலக குமக்கென வுரைத்துப் போயினார்."

முகம்மது நபி அவர்கள் இச்சொற்கள் செவிக்கும், இதயத்திற்கும், இன்பம் நல்கியதென்றாலும், அவர்கள் உடல் கொடுமையைத் தாங்க மாட்டாமல் தவித்தனர். சுமையா துன்புறும் கணவனை நோக்குவாள்; மைந்தனை எண்ணுவாள்; விண்ணையும் நோக்குவாள்; அவர்கள் படும் துன்பத்தைக் காண இயலாத அவள் 'காசறு பொன்னகர் காணச் சென்று விட்டார்' எனக் கவிஞர் உமறு காட்டுகிறார்.

துன்பத்திற்கும் ஒர் எல்லையுண்டு. எல்லை மீறினால் கொள்கை மாறாது என்றோ மடிய வேண்டிய உடலினை விட்டு உயர்பதவி நாட வேண்டிய நல்லவர் கடமை என்பதை உமறு சித்தரிக்கிறார் பாருங்கள்.

"மண்ணிடை கணவனை நோக்கி மைந்தனை
மெண்ணுற நோக்குவ ளிதயம் வாடுமப்
பெண்ணினை நோக்குவள் பெய்யுஞ் செந்தழல்
விண்ணினை நோக்குவன் வீடு நோக்குவாள்"[1]

"யாசிறு மனைவி நல் லறிவுக் கில்லிட
மாசற தீன் பயிர் வளர்க்கும் வேலியார்
பாசமற் றவரிடர் பார்த்தி லேனெனக்
காசறு பொன்னகர் காணப் போயினார்.”[2]

சுமையாவைத் தொடர்ந்து கணவனும், மகளும் பொன்னுலகில் குடி புகுந்தனர். தீனுக்காகத் தியாகம் செய்த தமையாளுக்கு உமறு வழங்கும் பேற்றினைப் பாருங்கள்!


  1. 1.சீறா. தினிலை கண்ட படலம் 130, 131
  2. 2.சீறா. தினிலை கண்ட படலம் 130, 131