பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220


அம்மார் அவர்களின் தாய் எவர்க்கும் தாயாக உயர்ந்து நிற்கின்றார் உமறுவின் கவிதையில்,

"தெரிமறை முகம்மதீன் தீனுக்காகவே

யிருநிலத் திடைமுத லிறந்து தேன்சொரி

மருமலர் சுவர்க்கமா ராம் பெற்றவர்

தரு அம்மா துடையதா யெவர்க்குந்தாயாரே"[1]

தீனுக்காகத் தொடக்கத்தில் உயிர் விட்டவர் சுமையாவே ஆவர். -

நபிகள் நாயகம் (சல்) அவர்களின் அன்புமகள் பாத்திமாவை உமறு பாடும் திறன் மிகச் சிறப்புடையது, 'பாத்திமா திருமணப் படலம்' உமறுவின் கற்பனைத் திறனுக்கும் கவிதை நயத்திற்கும் எடுத்துக் காட்டாயமைந்துளது.

பாத்திமாவை அறிமுகம் செய்து வைக்கும் கவிஞர் உமறு.

"ஆதிநா யகன்றன் றூதர்க் கன்புறுங் கதீஜாவீன்ற

பேதையர் நால்வர் தம்முட் பெற்றபே றனைத்துமொன்றாய்க்

கோதறத் திரண்டு சோதிக் கொடியென வருக்கொண்டோங்கி

மாதர்ச டிலத மென்ன மாநிலத் துதித்த பாவை."[2]


"பதித்தலத் துவக்கு மாதர் பவக் கடற் றிமிரமோட்டுங்

கதிர்தடத் தீப மென்னக் கட்டழ கெறிக்குஞ்சோதி.."[3]


"எண்ணருந் தவமுங் கற்பும் புகழுநின் றிறைஞ்சியேததும்

பண்ணரும் வேத வாய்மைப் படுதவ றாத வாக்கு


  1. 1.சீறா. தீனிலை கண்ட படலம் 132
  2. 2.சீறா. பாத்திமா திருமணப் படலம் 3, 4
  3. 3.சீறா. பாத்திமா திருமணப் படலம் 3, 4