பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

221


நண்ணருந் தரும மியாவுஞ் சொற்படி நடக்குநாளுங்

கண்ணகன் புலியிற் பாவைக் கற்பெனு மரசுக்கன்றே"[1]


"வடிவமு மொழுங்கு நீதி வணக்கமு மறிவும்பூத்த

கொடிமட மயிலைச் சோதிக் குலக் கொழுந்தனைய கற்பை "[2]

என்று பாத்திமாவின் அருமையையும் பெருமையையும் அறிவையும் கற்பையும், பண்பையும் பணிகளையும் பாராட்டிப் பேசுகிறார்.

பாத்திமாவை மனம் புரிய எண்ணியகம் பலர்,ஆயினும் முகம்மது நபி அவர்கள் அல்லாஹூத் ஆலாவின் எண்ணப்படியே திருமணம் செய்வேனென்று உறுதியுடனிருந்தார். பாத்திமாவிடம் அளவில்லால் கொண்டிருந்த அலி அவர்களும் அல்லாஹுத்த ஆலாவிடம் தன் காதலை நிறைவு செய்ய வேண்டி உருகி விண்ணப்பிதார். இருவருக்கும் இறையருளால் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்காக மஞ்சள் நீராட்டினார்கள் மணப்பெண் பாத்திமாவை, உமறுப் புலவர் மணப்பெண்ணின் சிறப்புக்களை,

"இறையவன் தூத ரீன்ற விருவிழி மனிமயச் சோதி

மறைபடா விளக்கைச் சேனின் வானிடத் துறையா மின்னைக்

கறைபடா மதியை நாளுங் கவின்குடி யிருந்த கொப்பைப்

பொறைவென வளர்ந்த கற்பைப் பூம்புன லாட்டினாரால்"[3]

என்று பாடி மகிழ்கின்றார்.


  1. 1.சீறா, பாத்திமா திருமணப்படலம் 1, 13, 169
  2. 2.சீறா, பாத்திமா திருமணப்படலம் 1, 13, 169
  3. 3.சீறா, பாத்திமா திருமணப்படலம் 1, 13, 169