பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

223


'எளியவர்க்குப் பழைய குப்பாயத்தைக் கொடுத்திருக்கக் கூடாதா? என்று வினவிய தந்தைக்கு பாத்திமா கூறிய பதில் அவருடைய அறவுணர்வை, ஈகைக் குணத்தை எடுத்துகாட்டுவதாக அமைந்துள்ளது. இதோ பாத்திமாவின் பதிலாக உமறு கூறும் கவிதை,

"அழகிய தெவையுமல் லாவுக் காகவே

விழைவுடன் கொடுத்திட வேண்டு மென்றுநும்

பழமறை வாக்கினாற் பகர்ந்த தாலரோ

மழைதவழ் கொடையனீர் வழங்கினேனென்றார்."[1]

"கவுலத்தை விட்டுக் கூட்டின படலம்' சீறாவுக்கு ஒரு மணியாய் ஒளிவிடுகிறது. அறம் பொருள், இன்பம், வேத வாக்கு ஆகிய எல்லாப் பொருளும் பொருந்தியமைந்துள்ளது. காதல், கடமை உணர்வுகள் கொப்பளிக்க இல்லறப் பொறுப்புகள் இலங்கத் தீட்டப்பட்ட இப்படலம் ஒரு சிறு திரைப்படக் காட்சியாகத் திகழ்கிறது.

"சொல்லால் வந்த அல்லலலை'ச் சொல்ல வந்த கவுலத்துக்கு ஏற்ற பின்னணியைத் தீட்டுகிறார் சீறா ஆசிரியர். மற்ற சமயத் தலைவர்களைப் பெண்களை எள்ளாது, ஏசாது, ஒறுக்காது அவர்களுடைய அமைதியான, பாதுகாப்பமைந்த வாழ்வில் கருத்துக் கொண்டவர் நபிகள் நாயகம் (சல்) அவர்கள்.

திருமண வாழ்க்கையில் இனிய பண்புகள் பலவற்றுடன் இனிதே வாழ்க்கை நடத்திய நபிகள் நாயகம் பிறறையும் அவ்வாறே தீதில்லாத இன்ப வாழ்க்கை வாழ வழி வகுக்கின்றார். சினந்து கூறிய சொல்லொன்றால் இல்லற வாழ்வில் ஏற்பட்ட விரிசலைச் சரிசெய்ய எண்ணி நபிகள் நாயகத்தை நாடி வந்தபோது அவர் நீராடிக் கொண் டிருந்தார். இதோ அக்காட்சியை உமறு காட்டுகிறார்.


  1. 1. சீறா பாத்திமா திருமணப்படலம் 206