பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224


'செம்மையு மறிவு மிக்க வாயிஷா வென்னுஞ்செல்வி

மும்மையு முனர வல்ல முழுமதி பிறசூ லுல்லா

தம்மைநீ ராட்டும் போதிற் சார்ந்தனள்"[1]

கணவனுக்கு மனைவி செய்கின்ற சிறுசிறு தொண்டுகளினால் இருவரும் பயனடைகின்றனர். கணவனுக்குச் சிறு வேலைகளிலுள்ள தொல்லைகள் நீங்குகின்றன. மனைவிக்குத் தன்னலமற்ற தொண்டுகளினால் மனப்பக்குவம் வளர்கிறது. கணவன்-மனைவி மனவொற்றுமையை வளர்ப்பதே இத்தகைய தொண்டுகள்தான்.

அவுசு என்பவருக்கு வாழ்க்கைப்பட்ட கவுலத்து தன்னுடைய முன் கதையைக் கூறுகிறாள்.

"இளமையு மெழிலுஞ் செல்வத் தியற்கையுங்கிளையு மிக்க
வளமையு முற்று மேனாண் மகிழ்ந்தினி திருந்தோமன்பா
புளமகிழ் தனையர் தோன்றி புரியவா லிபமுமாறி
யளவிடற் கரிய வாழ்வு மழிந்திட மெலிந்தபின்னர்," [2]

"சீற்றமும் பகையும் பொல்லாச் செய்கையு மன்றிவேறு
மாற்றமொன் றுரையா தில்லின் வருந்கொறும்புலிபோற் சீறிக்
கோற்றொடி யாரை நோக்கிக் கொழுநர்க ளொருகாலத்துஞ்
சாற்றரு முறை கொண் டென்னைத் தாயெனவுரைத்தார்."[3]

சினந்து 'தாயெ'ன்று கூறியதால் இருவரும் தனித்தனியே பிரிந்து விட்டனர். பட்டினி பொறாத என்று அழைத்தாலும் அன்புடன் அவர் திரும்பிப் பார்ப்பதுமில்லை. உற்ற உதவி


  1. 1.சீறா, கவுலத்தை விட்டுக் கூட்டின படலம் 4, 6, 7.
  2. 2.சீறா, கவுலத்தை விட்டுக் கூட்டின படலம் 4, 6, 7.
  3. 3.சீறா, கவுலத்தை விட்டுக் கூட்டின படலம் 4, 6, 7.