பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228


பொருத்தமாம், ஆங்கிலத்தில் இதனை இலக்கிய ஆய்வாளர்கள் "Supernatural elements? என்பர் இவ் இயற்கை கடந்த ஆற்றல்கள் (Miracles) (முஃஜிஸாத்து) பெருமானாரின் வாழ்விலும் நடைபெற்றன என வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன.1 தெளிவுபடுத்துகின்றன. பல்வேறு சூழல்களில் அவ்வவ்வாறு ஆற்றிய பெருமானாரின் அற்புதங்கள் நபித்துவத்தின் சான்றுகளாகச் சமைந்துள்ளன. அவைகள் இஸ்லாத்தின்கண்-பெருமானாரின் தூதின் பால் மக்களை ஈர்த்தன. இறைவன் தனது மெய்த் தூதர்களின் மூலம் இறையாற்றலை விளங்க வைக்கும் விளக்கமாகவும் அவைகள் விளங்குகின்றன. அற்புதச் செயல்களை நபிபெருமானார் காட்ட என்றுமே நாட்டம் கொண்டதில்லை. ஆனால் மக்களின் வேண்டுதல், கட்டாய நிர்ப்பந்த சந்தர்ப்பங்களினால் தான்-பெருமானார் இறையாற்றலால் அவற்றினை இனிது காட்டினார் என்பதனை முதற்கண் கொள்ளுதல் வேண்டும். திருக்குர்ஆன் எல்லா அற்புதங்களிலும் மாபெரும் தலையாய அற்புதமாக மிளிருகிறது3a. பெருமானார் வாழ்வில் நடைபெற்ற இயற்கை கடந்த செயல்களை (இயற்கைக்கும்


1. (அ) கலைமறை முகம்மது எனுங்காரணம் ... காரணங்கள் பக் 79 முதல் 100,

(ஆ) "முஹம்மத் நபி" ... பெருமானாரின் அற்புதங்கள் பக். 388 முதல் (சையத் இப்ராஹீம்) 415 வரை 44 அற்புதங்கள்

(இ) ஸஹீஹில் புகாரீ, மிஷ்காத்துல் மஸாபீஹ் திர்மத ஸீரத்து இப்னு ஹிஷாம் ஸீரத்கல் ஹலபிய்யி, சில வுஃது கிரந்தங்கள்

(ஈ) ஹிஸ் புல் பஹர் ... உயிரில்லாத எட்டு வஸ்துகள் ந யகத் தோடு பேசியது பக்: 34 முதல் 37 வரை

(உ) அல்திக்றுல் மைமூன் லிருருல் மக்ஸின் (அவிக் இலாஹி) 2000 முஃகிஸாத்துக்கள் என்கிறார். 100 முஃஜிஸாத்துக்களை தந்துள்ளார்.

(ஊ) "தீன்ஹஸார் முஃகிஸாத்' (300 அற்புதங்கள்)

(எ) ஸீயர் எனும் ஸீரதுலன்னபி (உருது) பல அற்புதங்கள்

3a, இமாம் பூஸ் ரி (ரஹ்) "புர்தா ஷரீப்”

(ஏ) இமாம் கஸ்ஸாலி (ரஹ்) இஹ்யாவு உலூமித்தீன் "அக்லாகுன் னபி" பகுதியில் பல அற்புதங்கள்

(ஒ) அண்ணலாரின் அற்புதங்கள் முதற்பாகம், இரண்டாம் பாகம்

(ஓ) முன்னைய நபிமார் விளைத்த அற்புதங்கள்...மதியை அழைப் பித்த படலத்தில் காட்டப்படுகிறது.