பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

229


இயற்மை சட்ட கிட்டங்களுக்கும் புறம்பாகவும் மாற்றமாகவும் நடைபெறும் நிகழ்ச்சிகள்) புலவர்கள் தங்கள் தங்கள் உலக (மொழி) இலக்கியங்களில் பயன்படுத்தி, மன்னிய நபியின் மாண்புகழ் பாடியிசைத்துள்ளனர் இத் தகையதோர் பின்புலத்தில் சீறாக் காப்பியத்தினுள் நுழைந்து உமறுப்புலவர் பாடிய இயற்கை கடந்த ஆற்றல்களைக் காண்போம்.

சீறாப்புராணம் ஒரு மென்மலர் பூங்காப்பியம், முதல் இஸ்லாமியத் தமிழ்க் காப்பியம்-நலைமைக் காப்பியம்- காப்பிய இலக்கண இலக்கியமாக இலங்கும் பெருங்காப்பியம்- முன்னோடிக் காப்பியம்-பின்வழி வந்த இஸ்லாமியத் தமிழ்க் காப்பியங்களுக்கு வழிகாட்டும் முன்மாதிரிக் காப் பியம்-'முன் மாதிரிகளுக்கு' முதன்மை வழிகாட்டியவரின் வாழ்வு கூறும் இலக்கண இலக்கிய காப்பியம்-மன்பதை மாண்புற வந்த மக்கநகர் நாயகர் வாழ்வு பகரும் மக்கள் காப்பியம்-வள்ளல் நபியின் வரலாற்றுக் காப்பியம். சீறா இங்ஙனமாக ஒரு முழுமைக் காப்பியமாக இலக்கிய வானில் இனிது விளங்குகிறது.

பெருங்காப்பிய (Epic) அங்கங்களுள் இயற்கை கடந்த செயல் (Supernatural elements)ஒன்றாகக் கருதமளவுக்கு இடப் பெற்று வருவதைக் காணலாம். எல்லை மீறிய நிகழ்ச்சிகள் எந்நாட்டு இலக்கியத்திலும் உண்டு. எக் காலத்து இலக்கியங்களிலும் காணலாம். பொதுவாக இது இலக்கியங்களில் (அ) ஒரு அணியாக (ஆ) கருத்துச் சுவைபடுவதற்காக. (இ) கதையினில், பெறும் ஒரு உத்தியாக இயம்பப்படுதல் காணலாம், (ஈ) எல்லை மீறிய நிகழ்ச்சிகள் யாதேனும் ஒரு நற்பயன் கருதியே புலவரால் புகுத்தப்படுகின்றன. "காப்பியங்களில் இயற்கை இறந்த நிகழ்ச்சிகள் வருவது இயற்கை. சீறாக் காப்பியத்திலோ அவை ஏராளம். பெருமானார் அச் செயல்கனை இறையுதவியால் எளிதில் செய்து காட்டினார் என்கிறார்