பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

235


நடுவில் ஒரு மான் தோன்றி வழிகாட்டும். அதன் வழி தாங்கள் கூட்டத் தினருடன் சேர்ந்து செல்லுங்கள் என்றுரைத்தார். அவ்வாறே நதி கடந்த-இயற்கை கடந்த செயல் இப்படலத்தில் பகரப்படுகிறது.

புலி வசனித்த படலம் ஷாம் நாடு பயணப் பாதையில் புலி ஒன்று குறுக்கிட்டு, அவ்வழிச் செல்வோர்களையும், கால்நடைகளையும் கொன்று நின்று கொண்டிருப்பதாகக் கூறக்கேட்ட முகம்மது (சல்) அவர்கள், அப்புலியை ஒழிப்பதற்காகச் சென்றார்கள். பூமான் முகம்மதுவின் பொன் ஒளிர் முகம் கண்ட புலி பணிந்து சலாம் கூறியது. பெருமானார் தனக்குப் பணிந்த வேங்கையினை வேறு கானகத்திற்குச் செல்லுமாறு கட்டளையிட்டார்.

"லந்து தெண்டனிட்டெழுந்துவாய் புதைத்துறவணங்கிப்

புந்தி கூர்வரப் போற்றிய வள்ளுகிர்ப் புலியை

மந்த ராசல முகம்மது நனிமன மகிழ்ந்து

சந்த மென்மணிக் கரத்தினாற் சிரமுகந் தடவி."

இன்று தொட்டிவ ணெறியினி லுயிர் செகுத் திடுவ

தன்று வேறொரு காட்டினிற் புகுக." [1]

எனலும், பணிந்து வேறு காட்டிற்கு விரைந்த அற்புதம் இப்படலத்தில் பேசப்படுகிறது.

"அவர்கள் சிற்றின்பஞ் சார்ந்த வாழ்க்கையினின்றும் தூய்மையாக்கப்பட்டவர்கள். கோபத்தினால் உணர்ச்சி வசப்பட மாட்டார்கள்! ஆண்டவனின் ஏவலைத் தலை மேற் கொள்பவர்கள் அல்லாஹ்வைப் புகழ்வதே அவர்களது உணவு; ஆண்டவனின் புனிதத் தன்மையைப் பிரகடனப் படுத்துவதே அவர்களது பானம்; அவனை நினைத்துக் கொண்டிருப்பதே அவர்களின் பேச்சு அல்லாஹாவைத்


  1. 1. சீறா புலி வசனித்த படலம் 12