பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

238

என இருகரமும் இழந்தவனின் கரத்தினைப் பொருத்தச் செய்தார்கள் எனும் இயற்கை கடந்த செயல் இப்படலத்தின் கண் ஓதப்படுகிறது.

ஊசாவைக் கண்ட படலத்தில் ஒரு அற்புத நிகழ்ச்சி

கரமிழந்த வஞ்சகனுக்குக் கருணை பொழிந்தபின், வரும் வழியில், தனது அன்பர்களுடன் ஒரு கொல்லன் உலை கூடத்தினருகே அமர்ந்தார்கள். அந்தக் கொல்லன் “நெருப்பு குத்திடுந் தெரித்திடுஞ் சுடுஞ்சிடு நெறியீர், இருப்பிடம் தவிர்ந்து எழும்” என எச்சரித்தான். நண்பர்கள் நீங்கினர்: நாயகம் மட்டும் அவ்விடம் விட்டு ஒதுங்காது அவன் எச்சரிக்கைக்கு நெருப்பின் தன்மை பற்றி நல்விளக்கம் நவின்றார்கள். அறவுரை கேட்ட அற்பன் கொல்லன் கொதிப்படைந்து அலையை மேலும் எரியூட்டி தீப்பொறிகளைச் சிதறவிட்டான். தீப்பொறிகள் செம்மல் நபி மேல் தெரித்த போதிலும் அவைகள் சுடவில்லை எனும் அற்புதம் இப்படலத்தினூடே உமறுவினால் உரைக்கப் படுகிறது.

உடும்பு பேசிய படலம்

மக்க மாநகர் அண்மைப் பகுதியிலுள்ள கானகத்தில் பெருமானாரைச்சூழ பெருமை மிகு தோழர்கள் அமர்ந்திருந்தனர். அன்று, அறபி வேடன் ஒருவன் வேட்டையாடிய உடும்பொன்றினை சுமந்து மீண்டு வரும் வழியில் குழாத்தினைக் கண்டான். வேடன் அண்ணல் முகம்மதுவினை யாரென அறியும் அவாவில் பெருமைமிகு தோழர்களிடம் வினவினான். அதற்கு தோழர்கள் ‘இவர்தான் 'ஆதி இறை அல்லாஹுவின் தூதர் முகம்மது முஸ்தபா ரசூல்’ என ஓதினர். இதன் பின் வேடனும் பெருமானாரும் அளவளாவினர். பெருமானார் தமது தூதை எடுத்துக் கூறினார். வேடன் அதற்குத் தகு சான்று கேட்டான். மிகவும் தனது வேட்டைப் பொருளான உடும்பு பெருமானாரோடு வாய் திறந்து பேசினால் நான் தங்களை நபியென நம்புவேன்