பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

241


ஈத்தங்குலை மட்டும் தன்முன்னே வரவழைக்கக் கேட்டனன். அவ்வண்ணமே நிகழ, மீண்டும் அந்த மரத்தில் அக்குலை பொருந்தக் கோரினான். அதன்படியே பொருந்தச் செய்தார்கள். காட்டரபி ஈமான் கொண்டான்.

புத்து பேசிய படலம்

குசைனு என்பவன் பெருமானாரைக் காணவந்து, தான் வணங்கி வரும் சிலை வாய் திறந்து பேசி தங்களை ஏற்றுக் கொண்டால் தான் ஈமான் கொள்கிறேன் என்றான். அதன் படியே அச்சிலையினை வரவழைத்து பெருமானார் போர் செய்தார்கள். குசைனும் இஸ்லாமானான், இந்த அற்புதம் பற்றிப் பாடுவது புத்து பேசிய படலம்.

பருப்பத ராஜனைக் கண்ணுற்ற படலம்

தாயிப் நகரில் இப்னு அப்துயாலில் எனும் குறைஷியினை பெருமானார் சந்தித்து நபித்துவ விபரம் கூறிய ஞான்று அவன் பாசாங்கு செய்தான். இரண்டொரு நாளில் நேரில் வந்து வழிபட்டு நடப்பேன் எனக் கூறி மக்க மாநகரம் திருப்பி அனுப்பி வைத்தான் மக்க மாநகர் நோக்கி பெருமானார் வருங்கால். இப்னு அப்துயாலில் சிலரை ஏவி கற்களால் எறியக் கட்டளையிட்டான். அவர்களும் அது அங்ஙனமே செய்தார். கல்லெறியினால் நாயகத் திருமேனியின் முழங்காலிலிருந்து குருதி வழிந்தோடியது. முகம்மது ஆண்டவன் நாட்டம் இதுபோலும் எனத் தேறுதல் அடைந்தார். அச்சமயம் வானிலிருந்து அமரர் கோன் ஜிபுரயீல் தோற்றமாகி சலாம் கூறி உங்களுக்குத் தொல்லை தந்தவர்களை ஒழிப்பதற்கு பர்வதங்களுக்கு (மலை) அதிபதியான மலக்கை உங்களின் ஏவலின்படி செயல்படுமாறு உத்திரவிட்டுள்ளான். அவர் உங்களிடம் சிறிது நேரத்தில் வருவார். பகை வர்தம் குறும்புகளை அடக்கி ஒடுக்குவார் என்று கூறிச்சென்றார் அதுபோன்றே பருப்பத ராஜா பெருமானார் முன்வந்து சலாம் கூறி, "தங்களது உத்தரவு வழி செயல்படுமாறு இறைவன் அனுப்பியுள்ளான். தாங்கள் இடும் ஆணை யாது?’ என

1 6