பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

244


இரண்டு மூன்று நாட்களாக நபிகள் நாயகம் தூக்கமின்மையால், அபூபக்கர் மடிமிசை செழுந்துயில் புரிந்தார்கள் அவ்வமயம், மலைமுழையதனின் கண்ணமைந்த குறுவளையினிற் “கொடுங்கண் வெவ்வாய்த் தெறுநுனைப்புரைப்பற் புண்ணாச் சிறுபொறிப் படத்த செஞ்சூட்டெறுழ் வலிக் கரியபாந்தள்” தோன்றி அபூபக்கர் சித்திக் (றலி) அவர்களின் காலைக் கடித்தது. பன்னருங் கொடியவிடம் உடல் முழுவதும் பரவியது கடிவழி உதிரஞ் சிந்தக் காலசைத்திடாமற் தூதர் செய்யும் நித்திரைக்கு இடரில்லாமல் இருந்தார். மயக்கந் தோன்றத் தன்னிலை தளராது அசையாது இருந்தார். இந்நிலையில் துயின்றெழுந்த கருணைக் கடல் நாயகம் விபரம் அறிந்து, தங்கள் வாயமுதத்தை எடுத்து கடிவாயினிற் தேய்த்தார். அமிர்த நீர் உடலெல்லாம் பரந்து வெவ்விட அனுவறக் கடிந்து, நலம் பெற்றார். எனினும் இயற்கை கடந்த செயலை இப்படலத்தில் உமறு விரிக்கின்றார். (புகாரீ ஹதீஸும் இதனை மொழியும்).

சுறாக்கத்துத் தொடர்ந்த படலம்

நபி பெருமானாரும் அபூபக்கரும் தெளர் குகை நீங்கிப் புன் பிரயாணத்தைத தொடர்ந்தனர். அபூஜஹலின் ஆட்களால் அனுப்பப் பெற்ற ஒற்றர்களில் ஒருவனான கறாக்கத் என்பவன் இவர்களின் பாதை கண்டு நெருங்கலானான். அப்போது. அவனது குதிரையின் குளம்புகளைப் பூமியானது கவ்விக் கொண்ட அற்புதமும் அவனையும் பிடித்துக் கொண்ட அற்புதமும் இப்படலத்தில் விவரிக்கப்படுகிறது.

உம்மி மகுதுப் படலம்

சுறாக்கத்துத் தொடர்ந்த பின், அண்ணலாரும் அபூபக்கர் சித்தீக்கும் (றலி) செல்லும் வழியில் ஆயர்குல உம்மி எனும் முப்புடைய மூதாட்டியினை சந்தித்தனர். அவளது இல்லம் பஞ்சமும் வறுமையும் மிடிமையும் மிகுந்து காணப்பட்டது. கொடுப்பதற்கு யாதொன்றும் இல்லாதிருந்தாள். அப்போது அங்கு வயதுமுதிர்ந்த ஆடொன்று இருந்தது.