பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

246


(205, 206) இதனைத் திருக்குர்ஆன் சூரா அன்பன் (8:171 வாயிலாக "மண்வாரி வீசியது நானே" என இறைவன் அறிவிக்கின்றான்.

'ஷாமிலிருந்தும் மக்காவிலிருந்தும் வந்த இருபெரும் படைகளுள் ஒன்றினை உமக்குச் சரணடையச் செய்தேன்’ என இறைத் தூதருக்கு அல்லாஹ்வின் மொழி வந்திறங்கியதை உமறுப்புலவர் (72) குறிப்பிட்டுள்ளார்.

அபூத்தலகா விருந்துப் படலம்

அபூத்தல்கா எனும் அஸ்ஹாபி பெருமானாருக்குக் கொடுத்த மூன்று ரொட்டியினை, பன்னரும் துண்டப்படுத்தி நெய் தோய்த்துப் பதின்மர்தமைப் பண்பு கூர அழைத்து இன்னமுது செய்க என புசிக்கச் செய்தார்கள், அன்னவர்கள் கையார, வாயார, வயிறார உண்டனர். பதின்மர் எடுத்து அருந்தியும் பாத்திரத்தினளவு குறைந்தில. பின் இன்னும் பத்துபேர் வந்திருந்து உண்டனர். மேன்மேலும் உணவு வளர்ந்தது. எண்பது பேருக்கு அளிக்கப்பட்டது, மீறிக் கரை ததும்பக் கிடந்த செழும் பாத்திரத்தை' நாயகம் அபூத்தல்காவிடம் அவரது மனைக்கு எடுத்துச் செல்க (8, 9, 10) என்றார்கள் எனும் அற்புதம் அறிவிக்கப்பட்டது.

கந்தக்குப் படலம்

கந்தக்குப் படலத்தில் அகழி தோண்டும் பொழுது மாமலைப் பாறையொன்று தோன்ற, அதனைப் பிளக்க பிளக்க தகர்ந்தில (49, முதல் 52). பெருமானார் கருங்கற் பாறையிடத்திற்கு வந்தார்கள். தம் செழுங்கரத்தில் உள்ள கூந்தாலத்தால் ஓங்கி அடிக்க பேரொலி திசைதொறுந் தழைப்ப சிதறுத் துண்டங்களாயின :55, 56) எனும் அற்புதம் பகரப்படுகிறது.

இப்படலத்தில் ஏழ்மை மிகு சாபிர் (றலி) நபிகள் நாயகத்திற்கு தோழர்களுக்கும் ஒப்பற்ற விருந்தொன்று