பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

248


தம் பாளை ஈக்கினை அப்துல்லா கை கொடுக்க அது கூர்மை தாங்கிய வாளென விளக்கிற்று எனும் அற்புதச் செய்தியும் (189 முதல் 191 வரை) தரப்படுகிறது.

சாபிர் கண்ட தீர்த்த படலம்

சாபிர் எனும் அஸ்ஹாபியின் தந்தை எஹூதி காபிர் ஒருவனுக்கு அறுபது கோட்டை பேரீத்தம்பழம் கடனாகப் பெற்றதைக் கொடுக்க வேண்டும், அவர் இறந்தபின், எஹூதி சாபிரிடம் வட்டியும் முதலுமாக நூற்றைம்பது கலம் கொடுக்க வேண்டும் எனக் கேட்டான். சாபிர் பெருமானாரிடம் சென்று விபரம் கூறி, ஈத்தந் தோப்புகளில் வருகிற பலன் குறைவே ஆகும். நாலாண்டுகள் ஆயினும் கொடுத்தல் என்பது இயலா. ஆவண அருள் புரிய வேண்டி நின்றான்.பெருமானார் எஹூதியினை அழைத்து சாபிரோடு 'பொறி வரி வண்டு கிண்ட வெறித் துணர்த் தாது துன்றும் வேரியஞ் சோலை புக்கார்’,

"அடல்புரி சாபிர் தம்மை யருகினிற் கூவி யீந்தீன்

றுடைவையின் கணிக டாருத் தொறும்பரித் தீட்டு மென்னப்

படிபுகழ் ஹபீபு சொன்ன சொற்படி படர்ந்து செந்தேன்

குடிபுகுங் கணிக ளியாவு மரந்தொறுங் குவித்து வைத்தார்," [1]

அக்கணம் எஹூதியினை அழைத்து நூற்றைம்பதின் கலப் பழமும் குறையாது கொடுத்தார் எனும் அற்புதம் கூறப்படுகிறது.

ஒட்டகை பேசிய படலம்

ஒரு ஒட்டகை திடீரென மதம் பிடித்து ஈத்தந் தோட்டங்களை அழித்து வந்தது. தோட்டங்களுக்கு உரிமையாளர்கள் நாயகத்தினிடம் வந்து முறையிட்டனர். புனிதர்

  1. 1. சீறா சாபிர் சடன் தீர்த்த படலம் 7