பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

254


திருந்து, விழித்திருந்து இறைச்சிந்தனையினை வளர்த்து வரும் நன்னாளில்-நாற்பதாவது அகவையில்-இரவினில் வானவர் கோன் ஜிபுரயீல் (அலை) முன் வந்து விண்டலம் பரவும் 'வேதநபி' எனும் பட்டம் பெற்றீர்! மறை வசனங்களை ஓதுங்கள்’ என்று கூறினார். முகம்மது (சல்) 'யான் எழுத்தறிவு ஒன்றுமறியேன்' என்று கலங்கி நிற்க, ஜிபுரயீல் முகம்மது (சல்) அவர்களை இருகரத்தாலும் கட்டணைத்துப் பிறகு 'ஒதுங்கள்' என்று கூறினார்கள். அப்பொழுதும் அண்ணல் நபி “மறை முதல் வசன நாவின் வழக்கினன் அல்லன்” என்றார். மும்முறை ஏந்தல் நபி அவர்களை இறுகத் தழுவி நெருக்கி வருத்திப் பின்னும் 'ஓதுங்கள்' என்று சொல்லவும் முகம்மது 'உரையும்’ என்க, ஜீபுரயீல் "இக்றஃ” என்று தொடங்கும் சூராவின் முதல் நான்கு ஆயத்துக்களை 'மாலம் யஃலம்’ வரை உரைத்தார்கள். நபியவர்களின் திருவாயால் ஓதிய வசனங் கேட்டு உள்ளம் களிப்படைந்த ஜிபுரயீல் அவர்கள் விண்ணுலகத்தின்கண் மறைந்தார்கள்.

மற்றொரு நாள் இதுபோன்று ஜிபுரயீல் (அலை) ஸீரத்துல் முஸ்ம்மில் அத்தியாயத்தினை அளித்துள்ளதனையும் உமறுப் புலவர் பாடுகிறார்.

தொழுகை வந்த வரலாற்றுப் படலம்

தொழுகை வந்த வரலாற்றுப் படலத்தில் ஜிபுரயீல் வானத்திலிருந்து இறங்கிப் பெருமானாரை ஹிராமலையின் அண்மையில் அழைத்துச் சென்று, பூமியைப் பிளந்து தண்ணிர் எடுத்ததனை,

"சிலம்பி லுறைந்த முகம்மதுவைத்

திருந்து மமரர் கோமரன் கொண்

டுலம்பற் றுறுஞ்சின் னெறியினிழிந்

துடனின் றரிதேரர் மருங்கனணந்து

நிலம்பிட் டுதிர மண்சிதற

நிலவா மணித்தாள் கொடுகீண்டப்