பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

257


சூதாட்டங்களையும் கொண்டு உங்களுக்கு இடையே பகைமையும் வெறுப்பையும் உண்டாக்கி அல்லாஹ்வின் நினைவை விட்டு, தொழுகையை விட்டும் உங்களைத் தடுத்து நிறுத்துவதேயாகும். எனவே, நீங்கள் (அவனை விட்டு) விலகிக் கொள்வீர்களாக! எனும் அறிவுரை சான்று பகரும். அன்றோ! 'சைக்தான் என்பது கீழான மனத்தின் குணம் அல்லது தத்துவம்தான்’ என இப்னு அரபி (றலி) கருத்துத் தெரிவிக்கிறார்கள்.

முஸ்லிம்களுக்கு தொல்லைகள் பல தந்த 'அபீறாபிகு' என்பவன் கைபர் சோலையில் வாழ்ந்து வந்தான். அவனை உமறு, "சதி மனத்து இபுலீசு என்போன் அதபு அறி வென்பதில்லா அகத்து அபீறாபிகு’ என அவனை இபுலீசுக்கு மகனாகக் கூதுகிறார். எனவே நன்மைக்கு எதிரிடையான தீமை யோனை இபுலீசு எனக் கூறுவதே பொருந்தும். வழக்கம், மரபு என்பது மேலும் தெளிவாகும். சீறாவின் "வினையம் உற்பவித்த புத்தி அபூஜகல்", 'தீமைபுனை அபூஜகல்”, "இகன் மனத்தபூஜகலும் இபுலீசே' என்பது பொருந்திய முடிவாம். இத்தகையதோர் பின்புலத்தில் உமறு உருவகிக்கும் இபுலீகை-சாத்தனை சைத்தானை) காண்போம்:

உமறுப் புலவரின் உருவகம்

பெருங்கவிஞன் மில்டனின் உலகப் பெருங்காப்பியமான சொர்க்க இழப்பின் (The Paradise Last) சாத்தானைப் (satan) பற்றிய திறனாய்வுகள் தான் எத்தனை! எத்தனை!!ஒப்பற்ற உமறுப்புலவர் இபுலீசை ஜின்கள் ஈமான் கொண்ட படல'த்தில் உருவகித்துக் காட்டுகிறார். பெருங்கவிஞன் மில்டனின் வர்ணனைகளோடு-உருவகத்தோடு ஒப்பாய்விற்குரியது. ஒமர், வெர்ஜில் போன்ற பெரும் புலவர்களும் கடவுள், தெய்வீகத்தன்மைகள் போன்றவைகளைத் தமது இலக்கியங்களில் பங்கு பெறச் செய்தனர். சொர்க்க இழப்பில் கடவுள் சாத்தான் பிற தேவதூதர்கள், வெறுப்பூட்டும் 'Ioathsome Sin' போன்ற இயற்கை கடந்த பாத்திரங்

17