பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

258


களை காட்டியுள்ளமை இவண் குறிப்பிடத்தக்கது. பீரப்பாவும் இபுலீசை உருவகப்படுத்தி வர்ணித்துள்ளார்.

"குணத்தினால் நரியொழுங்குங்
   கொடு விசமாவு தந்தம்
தனத்திடு தலையிற் கொம்பு
   தானது நடுவே யொன்று
யனைச்சிடு மதச்கரியின்
   பாங்கென வாலுங்காலுங்
கனத்த கோல் கையிலேந்திக்
   கசடனும் பிறந்தானப்போ" [1]

புலவர் நாயகமும் இபுலீசு உருவத்தினைப் பாடியுள்ளார்.

"நிரையுமேனியுங் கூனியுந்தே யெயிற்
றுறையுங் கோலினிலுன்றது நின்றலு
நரையுந் தாடியு நாடியுமாடியும்
புரையும் புல்லிபு வீசவன் புக்கினான்." [2]

'இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய தமிழ்க் காப்பியங்களில் இபுலீஸ் என்பவன் பாட்டுடைத் தலைவனின் எதிரியாக வருணிக்கப்பட்டுள்ளான்." [3]

இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள் இபுலீசு பற்றிய தனியிலக்கியம் படைத்தனர். செய்யிராக்கரின் 'இபுவீசு நாமா' குறிப்பிடத்தக்கது.

உமறுப்புலவர் இபுலீசைக் கூறும் அடைமொழித் தொடர்களைக் காண்போம்.

'மாயவஞ்சகன் (யாத் திரைப் படலம். 5-6); "வஞ்சநெஞ்சி புலீசு "(உகுதுப் படலம். 109); "சனவஞ்சக மாயவன் கொடியவனிதமிலூனமுற்ற கண்ணினன் றொடர்ந்தெவரை


  1. 1. திருநெறிநீதம்-407
  2. 2.திருமணிமாலை 7:11 செயற்கையங் காண்டம், மத் திரப்படலம்.
  3. 3.திருக்குர்ஆனும் முஸ்லிம் மக்களின் தமிழ்ப்பேச்சு வழக்கும் இலக்கிய வழக்கும் பக், 26 அல்ஹாஜ் கலாநிதி மு. உவைஸ் M;A;Ph.D.