பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

263


மாறி, மனம் நொந்து அவரவர் திசை நாடிப் போயினர். இபுலீசும் மனம் வருந்தித் திகைத்து இருந்து எழுந்து பின் வாங்கித் தன் திசை நாடிப் போயினன்.

உமறுப்புலவர் காட்டும் இபுலீசின் சந்ததிகள் யாவர்? மறவழியில் செயல்படக் காரண காரியமாயிருக்கும் மண், பெண், பொன் ஆகிய மூவாசைகளையும், பஞ்சமா பாதகங்களையும் (கொலை பொய், களவுகள் குரு நிந்தை) சைத்தானின்-இபுலிசின் சந்ததிகளாகக் காட்டுகிறார். பொருத்முற பொருத்திக் காட்டும் திறன்தான் என்னே! உமறுப் புலவர் இங்ஙனமாக இபுலீசு என்பவனின் நிலையும் அவன் சுற்றத்தினையும் விளக்கி-உருவகித்து கவிச் சித்திரமாக்குகிறார். இபுலீசுக்கு இவண் சந்ததிகளை காட்டும் திறனும் ஓர்ந்துணரத்தக்கது.

முடிவுரை

பெருங் கவிஞரேறு உமறுப்புலவர் பெருங்காப்பிய மரபுகளுள் ஒன்றான இயற்கை கடந்த செயல்களைக் காட்ட நிகழ்ச்சிகளைத் தேடி அலையவில்லை. வரலாற்றுக் காப்பிய நாயகரின் மீமானிடமான (Superhuman) வாழ்வியலைக் காட்டி சீறாக் காப்பிய மஹாலை வண்ணப்படுத்தி அழகொளியூட்டியுள்ளார், இச் செயல்களின் வழி சீறாக் காப்பிய-வரலாற்று நாயகரின் முகம்மதுவின் மாண்பு சுடரொளி பரப்பும் நபித்துவத்தின் மகிமை துலங்கும். நபித்துவச் சான்றாகவும் அவைகள் அமையும் அவைகளை இறையுதவியால் எளிதில் செய்து காட்டினார் என்பதும் பெறப்படும். இங்ஙணமாக வரலாற்றுச் செய்திகள் காப்பியப் பாங்களில்-மரபினில் இயற்கை கடந்த செயல்களாகவும் பாத்திரங்களாகவும் அமைந்து ஒளி விடுகின்றன.