பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

266


பல்வேறு சமயங்களை அடிப்படையாகக் கொண்டு தோன்றிய தமிழ்க் காப்பியங்களில் அவ்வச் சமயங்களின் மொழிகளிலிருந்து பெறப்பட்ட தனித்துவம் வாய்ந்த சொற்கள் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். பெளத்த மத அடிப்படையில் தோன்றிய தமிழ்க் காப்பியங்களில், இலக்கியங்களில் அம்மதத்தின் புனித மொழியான பாலி மொழிச் சொற்கள் முக்கியமான ஓர் இடத்தை வகிக்கின்றன. அதே போன்று சமண சமய அடிப்படையில் தோன்றிய தமிழ்க் காப்பியங்களில் பாகதச் சொற்களும் வைணவ நெறியினைப் போதிக்கும் இலக்கிய நூல்களில் வட மொழிச் சொற்களும் கிறித்தவ மார்க்கத்தினைப் போதிப்பதற்காகத் தோன்றிய காப்பியங்களில் லத்தீன் மொழியிலிருந்து தோன்றிய சொற்களும் பெருவழக்கைப் பெற்றிருக்கின்றன. இஸ்லாமிய வழியை எடுத்துக் கூறும் இலக்கிய நூல்கள், சிறப்பாகத் தமிழில் தோன்றிய காப்பியங்கள் அவற்றின் சிறப்பியல்பாகப் பெரும்பான்மையான அறபுச் சொற்களையும் ஓரளவு பாரசீகச் சொற்களையும் கொண்டு லிளங்குகின்றன. இஸ்லாமியக் கொள்கைகளைப் போதிக்கும் இலக்கியங்களில் அறபுச் சொற்களினதும் பாரசீகச் சொற்களினதும் ஆட்சி அவற்றின் இன்றியமையாத அம்சமாகி விடுகின்றன. அத்தகைய இலக்கியங்களிலிருந்து அறபுப் பாரசீகச் சொற்களைப் பிரிக்க முடியாத நிலை ஏற்படுகின்றது. இஸ்லாமியக் கருத்துக்களைத் தமிழில் விளக்குவதற்கு அவை அவசியமாகின்றன. எனவே இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய தமிழ்க் காப்பியங்களிலே எண்ணற்ற அறபுச் சொற்களும் குறிப்பிடத்தக்க அவை பாரசீகச் சொற்களும் ஆளப்பட்டுள்ளன.

அறபு மொழி அதன் செல்வாக்கினைப் பிரயோகித்ததனால் தாக்கத்திற்குட்பட்ட மொழி தமிழ் மொழி மாத்திரமன்று. உலகில் எந்தெந்தப் பகுதிகளுக்கு இஸ்லாம் பரவியதோ அந்த அந்த பகுதிகளிலெல்லாம் இஸ்லாமிய மொழியான அறபு மொழியின் தாக்கம் ஏற்பட்டிருப்பதைக் காண