பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

269


செல்வாக்கைப் பற்றிக் குறிப்பிடலாம், திசைச் சொற்கள் இல்லாத மொழி இல்லை என்றே கூறலாம். தமிழ்ப் பேச்சு வழக்கிலும் எழுத்த வழக்கிலும் இடம் பெற்றுள்ள அறபு பாரசீகச் சொற்களைப் போன்று தமிழ்ச் சொற்கள் அறபு, பாரசீக மொழிகளில் இடம் பெறவில்லை என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது. இச்சந்தர்ப்பத்தில் ஜெர்மானியைச் சேர்ந்த மசா பிரெட்றிக் கூற்றை நினைவு படுத்துதல் பொருத்தமுடையதாகும். ஜெர்மன், பிரெஞ்சு மொழிகளைப் பற்றிச் குறிப்பிடுகையில் மகா ஃபிரெட்றிக், 'நாம் உள்ளூர் மொழி (ஜெர்மன் மொழி)ச் சொற்றொடர்களை எமது வெளிநாட்டு மொழி (ஃபிரெஞ்சு மொழியைப் பேசும் பொழுது பயன்படுத்துவதில்லை. எனினும் ஜெர்மன் (உள்ளுர்) மொழியை பேசும்பொழுது ஃபிரெஞ்சு (வெளி நாட்டு) மொழிச் சொற்களைத் தாராளமாக உபயோகிக்கிறோம்' என்று நிலைமையைத் தத்ரூபமாக விளக்கி உள்ளார். ஒரு நாட்டு மக்கள் பிறமொழி ஒன்றினைப் பயில்வதனால் அந்நாட்டு மொழி கலப்பு மொழியாக மாறாது. அந் நாட்டு மொழி பிற மொழியின் செல்வாக்கிற்கு ஆளாவதினாலேயே கலப்பு மொழியாக மாறுகிறது என்பது திசைச் சொற்கள் பற்றிய பொதுக் கொள்சையின் அடிப்படைத் தத்துவமாகும். அறபு மொழியையும் தமிழ் மொழியையும் பொறுத்தவரையில் இக்கூற்று மிகவும் பொருத்தமான தொன்றாகும். பல சந்தர்ப்பங்களில் அவசியம் காரணமாகவே திசைச் சொற்கள் கடனாகப் பெறப்படுகின்றன. சொற்றொடர்பு சார்ந்தனவாக ஒரு மொழி மற்ற மொழியில் அதன் செல்வாக்கைப் பயன்படுத்துகிறது என்னும் கூற்றையும் நாம் ஏற்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய தமிழ்க் காப்பியங்களில் இடம் பெற்றுள்ள அறபுப் பாரசீகச் சொற்கள் திசைச் சொற்களாகவே அங்கு திகழ்கின்றன என்ற கூற்று இதன் பயனாக வலியுறுகின்றது. எனவே சீறாப்புராணத்தில்