பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

270


திசைச் சொற்களாக இடம் பெற்றுள்ள அறபுச் சொற்களையும் பாரசீகச் சொற்களையும் ஆராய முற்படுவோம். முதலில் அறபுச் சொற்களை எடுத்துக் கொள்வோம் இத்தகைய அறபுச் சொற்களை இஸ்லாமிய நெறியுடன் நெருங்கிய தொடர்புடைய அறபுச் சொற்களும் சொற்றொடர் களும் என்றும், முஸ்லிம்களுடைய சமூக வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட பழக்க வழக்கங்களுக்கு அவசியமான அறபுச் சொற்களும் சொற்றொடர்களும் என்றும், இரு வகையாகப் பிரிக்கலாம்.

"பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர் றஹீம்' என்னும் அறபுச் சொற்றொடரை முதலில் எடுத்துக் கொள்வோம். இச் சொற்றொடர் 'பிசுமில்’ என்றும் 'பிஸ்மில்லாஹ்' என்றும் சுருக்கி ஆளப்படுகிறது. 'பிஸ்மில்' என்றால் 'பெயரால்' என்பதாகும். 'பிஸ்மில் ரஹ்' என்றால் அல்லாஹ்வின் பெயரால் என்பதாகும். அளவற்ற அருளானும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் என்பதே 'பிஸ்மில்லாஹிர் றஹமானிர் றஹீம்' என்பதன் கருத்தாகும். இச்சொற்றொடரை உச்சரித்தே ஒவ்வொரு முஸ்லிமும் தமது கருமங்களை அவை எவ்வளவு சிறியவையாயிருந்த போதிலும் ஆரம்பம் செய்தல் வேண்டும். இவ்வறபுச் சொறறொடர் திருக்குர் ஆனிலே உள்ள சூறா தவ்பாவைத் தவிர்த்த ஏனைய சூறாக்கள் ஒவ்வொன்றினதும் ஆரம்பமாக அமைந்துள்ளது. 'பிசுமில்' என்னும் சொல் சீறாப்புராணத் தில் பல இடங்களில் உபயோகப் படுத்தப்பட்டுள்ளது. நபி கள் நாயகம் (சல்) அவர்கள் அல்லாஹ்வை நினைவு படுத்தி பிஸ்மிலைத் திருத்தமாக ஒதினார்கள் என்பதனையே,

"ஆதிதனை யுளத்திருத்தி பிசுமிலெனு முறை திருத்தி."[1] இவ்வாறு உமறுப்புலவர் குறிப்பிடுகிறார். பிஸ்மில்லா ஹிர் றஹாமானிர் றஹீம் என்பதனைச் சுட்டவே 'பிசுமில்’ எனும் பதம் உபயோகிக்கப்பட்டுள்ளது என்று கொள்ளல்


  1. 1. உத்துப வந்த படலம் 18