பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

271

 வேண்டும். பிஸ்மில ஒதப்பட்டமை 'தெரிதர பிசுமிலோதி' (மதீனத்தவர் ஈமான் கொண்ட படலம் 30) என்றும் 'மெய்யொளி முகம்மது பிசுமி லோதினர்' (புவாத்துப் படலம் 16) என்றும் குறிப்பிடப்படுகிறது. தங்கள் முன்னிலையில் கொண்டு வைக்கப்பட்ட கனிகளை அண்ணல் நபி (சல்) அவர்கள் மிஸ்மில் ஒதியே உண்டார்கள் என்பது ".........பழத்தினைத் திண்ட யின் ப, மனையநல் பிகமிலோதி யமுதென நுகர்தல் செய்தார்’ (அத்தாசு ஈமான் கொண்ட படலம் 4) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. போர் செய்யப் புறப்படுவதற்கு முன்னர் பிசுமில் ஒதப்பட்டமை

“...வேதம், பன்னிய பிசுமி லோதிப் பண்புட னெழுந்து வள்ளல்’’ [1]

என வருணிக்கப்பட்டுள்ளது. பிஸ்மில்லாஹிர்ரஹாமானிர் ரஹீம் என்னும் திருமறை வாக்கிலும் வேலில் பொறிக்கப்பட்டிருந்தது என உமறுப்புலவர் 'வீர வேலெனுங் கதிர் பிசுமி லேந்தி' (மதியை அழைப்பித்த படலம் 55) என்று குறிப்பிடுகிறார். இந்தச் சொற்றொடர் அங்க ஈனர்களின் குறைகளை நீக்க வல்லது என்பது,

"................... ......மனத்தில்வே
றெண்ண மின்றி பிசுமி லுரைத்தெடுத்
துண்ன நல்லுரு வெய்தின னுண்மையோன்." [2]

என நோய் தீர்க்கும் நிவாரணி என்பது தொனிக்கப் பாடப்பட்டுள்ளது அண்ணல் நபி (சல்) அவர்கள் உம்றாச் செய்யச் சென்றபொழுது குறைஷிக் காபிர்களுக்கும் இடையில் ஒர் உடன்பாடு ஏற்பட்டது, அந்த உடன் பாட்டின் நிபந்தனைகளை எழுத முற்படும் பொழுது இந்தச் சொற்றொரைக் கொண்டு ஆரம்பிக்கப்படல் வேண்டும் என்று பெருமானார் (சல்) கூறினார்கள். இதைக் கேட்ட

  1. 1.ஜின்கள் ஈமான் கொண்ட படலம் 22
  2. 2. அந்தகன் படலம் 19