பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

273


நாளின் மீதும், நன்மை தீமைகளின் முன்னளப்பு மீதும் விசுவாசங் கொள்வதாகப் பிரகடனப்படுத்துதல் ஈமான் முபஸ்ஸல் எனப்படும். இனி ஈமான் என்னும் அறபுச் சொல் அல்குர்ஆனிலே (2:108 முதலிய) பல இடங்களில் ஆளப்பட்டுள்ளதைக் காணலாம். ஜிபுறயீல் (அலை) அவர்களும் மீக்காயீல் (அலை) அவர்களும் நபிகள் பெருமானார் (சல்) அவர்களிடம் வந்து அன்பாய் அவர்களின் மார்பைக் கீறி இதயத்திலிருந்த குற்றம் களைந்து கசடை அகற்றி, ஏனைய தீமைகளையும் நீக்கி நன்றாகக் கழுவி நற்கருத்தினையும் நல்லிமானையும் நல்லறிவு முதலிய நல்லவைகள் அனைத்தையும் அதனுள் நிறையச் செய்தார்கள். இக் கருத்துக்களே ஒரு பாடலில் இவ்வாறு அமைந்துள்ளன.

"நேயமுற் றுரத்தைக் கீண்டு நிறையொளி பொங்குங் கஞ்சக்
காய்முகை கிழித்துள் ளுற்ற கறுப்பொடு கசடுமான
மாயவன் கூற்றை மாற்றி வழுவறக் கழுவி மாறா
தாயுநன் னினைவீ மானல் லறிவுட னிரப்பல் செய்தார்"[1]

மற்றொரு பாடலில் 'ஈமான்' என்னும் அறபுச் சொல்லை உபயோகிக்க முற்பட்ட உமறுப்புலவர் அச்சொல்லின் தாத்பரியத்தையே அங்கு விளக்கியுள்ளார். யாவற்றிற்கும் நாயகனான அல்லாஹ் ஒருவனே, அண்ணல் நபி முகம்மது (சல்) அவர்கள் அவனுடைய திருத்தூதராவார்கள். இக்கருத்துக்களே கலிமாவில் பொதிந்துள்ளன.ஓதப்படும் இக்கலிமாவை நிர்ணயப்படுத்திய பொருத்தமே ஈமான்; அதற்கிணங்க நடப்பதே அமல், இவற்றை நன்கு பின்பற்றிய தன் திருத்தமே இஸ்லாத்தில் சேர்தல். இத்தகைய பல


18

  1. 1. சீறா. இலாஞ்சனை தரித்த படலம் 28