பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

281


சொல் சீறாப்புராணத்தில் இடம்பெற்றிருக்கும் விதத்தினைப் பார்ப்போம்.

கலிமா என்னும் அறபுச் சொல்லை முஸ்லிம் மக்கள் தமது பேச்சு வழக்கில் அடைமொழியாக உபயோகிப்பர். சுட்டு விரலைக் குறிப்பிடக் 'கலிமா விரல்’ என்னும் சொற்றொடரைப் பயன்படுத்துவர். இச்சொற்றொடர் வலதுகைச் சுட்டு விரலையே சுட்டும், உமறுப்புலவரும் தமது சீறாப் புராணத்தில் சுட்டுவிரலைக் குறிப்பிட 'கலிமா விரல்’ என்னும் சொற்றொடரை,

விறல்புரி யாதம் வலதுகைக் கலிமா
விரனகத் திடத்தில் வைத்தனனே'. [1]

என்றும்,

"...... அணிக் கலிமா விரலினை யுயர்த்தி
யுதித்தனர் முகம்மது நபியே.." [2]

எனப் பயன்படுத்தி உள்ளார்.

சீறாப்புராணத்தில் 'கலிமா' என்னுஞ் சொல் மூல மந்திரம் என்னும் பொருளில் பல இடங்களில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. சில சம்யங்களில் அடைமொழி பெற்றும் வரும்; பெறாமலும் வரும். கலிமாவின் சிறப்பினைப் பல்வேறு வகைகளில் எடுத்துக்காட்டும் உமறுப்புலவரின் நயத்துக்கு பாடல்கள் சிலவற்றை ஈண்டு எடுத்துக் கொள்வோம், அங்கே விசுவாசமான சோலை இருக்கின்றது, அந்தச் சோலையிலே ஒன்றோடொன்று பின்னப்பட்ட கிளைகள் உள்ள மரங்கள் இருக்கின்றன. அந்தக் கிளைகளிலே குயிலினம் அவற்றின் பேடுகளோடு இருக்கின்றன. அங்கிருந்து அவற்றின் வாய் திறந்து இனிமையாகப் பாடுகின்றன. அந்த இனிய வாயினால் கலிமாவானது ஓதுங்கள் என்று கூறிக்

  1. 1. சீறா, தலைமுறைப் படலம் 22
  2. 2. சீறா நபியவதாரப் படலம் 37