பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

282


கொண்டிருக்கின்றன. இல்லை, அவ்வாறு கூறுவதுபோலக் கூவுகின்றன. அது எத்தகைய கலிமா தெரியுமா? அந்தக் கலிமா அழகிய கரும்பின் இனிய சுவையை ஒத்திருக்கின்றது. இக்கருத்துக்கள் அமைந்துள்ள பாடல் இதுதான்.

"பின்னிய தடத்தரு சினை பிற் பேடொடு
மன்னிய குயிலினம் வாய்விட் டார்ப்பது
கன்னலஞ் சுவைக்கலி மாவை நந்நபிக்
கின்னண மியம்புமென் றிசைத்தல் போலுமே." [1]

'துய்ய நற்கலிமா' (தலைமுறைப் படலம் 7) என்றும்......... சுடர் கடூங்கும் வலியுறு கலிமா...... (தலைமுறைப் படலம் 8) சுவைபெறுங் கலிமா' (இசுறாகாண் படலம் 41) என்றும் 'இன்பம் வருகனி கலிமா" (மணம் பொருத்து படலம் 25) என்றும் பூவினன் கலிமா (மணம்புரி படலம் 93) என்றும் 'ஆதிமுறைமறைக் கலிமா' (நபிப்பட்டம் பெற்ற படலம்) என்றும் 'வென்றிகொண் டுறங்கலி மா' (தொழுகை வந்த வரலாற்றுப் படலம் 12) என்றும் வாழ்வுக் கீதொரு' துணையென நற்கலிமாவைச் சொல்லி') தொழுகை வந்த வரலாற்றுப் படலம் 22) என்றும் 'கரும்பெனு நபிகலி மா' (தொழுகை வந்த வரலாற்றுப் படலம் 23) என்றும் மாசிலாத், திருநபி பெயர்க்கலி மா’ (தொழுகை வந்த வரலாற்றுப் படலம் 24) என்றும் இறைவன் றூதர் செவ்வி யியனபிக் கலிமா” (தீனிலை கண்ட படலம் 163) என்றும் 'சொன்னயக் கலிமா' (உமறுகத்தாப் ஈமான் கொண்ட படலம் 59) என்றும் 'தேனசோர் மருமலி கூறுங்கலிமா' (உமறுகத்தாப் ஈமான் கொண்ட படலம் 90) படலைத் திண்டோள் முகம்மதின் கலிமா வோதி' (உமறு கத்தாப் ஈமான் கொண்ட படலம் 64) என்றும் "முதிருங் கலிமா' (உமறு கத்தாப் ஈமான் கொண்ட படலம் 82) என்றும் 'நன்கலி மா' (உடும்பு பேசிய படலம் 24) என்றும் 'இனிதினும் பெயர்க் கலி மா'

  1. 1. சீறா. புனல் விளையாட்டுப் படலம் 20