பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

287



யுள்ளமு முடலும் பூரித் துருசிக்கு மமுதின்மிக்காய்த்
தெள்ளிய கலிமா வோதித் திணிலைக் குரியரானார்" .[1]

உமறு கத்தாப் (றலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவியதுடன் மக்கமாநகரிலே இருந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை நாற்பதாகியது. அவர்களுள் ஆண்கள் முப்பத்து மூன்று பேர். பெண்களின் எண்ணிக்கை ஆறு. உமறு கத்தாப் (றலி) அவர்களையும் சேர்த்து மொத்தம் 40 பேர். இவர்களே முதலில் கலிமாவைப் பெற்றவர்களாவர். கடலில் இருந்து பெறப்பட்டது அமுதம் சாயா நிற்கும் அலைகளினால் முத்துக்களை வீசி ஒலிக்கும் சமுத்திரம். இச் சமுத்திரம் காபிர்களுக்கு உருவகிக்கப்பட்டுள்ளது. இக் காபிர்கள் மத்தியிலிருந்து முஸ்லிம்கள் தோன்றினர். காபிர்கள் என்னும் சமுத்திரத்திலிருந்து எடுக்கப்பட்ட அமுதத்தை ஒத்திருந்தது கலிமா என்னும் இஸ்லாமிய மூல மந்திரம்; இந்த அமுதம் என்னும் மூலமந்திரத்தை முஸ்லிம்கள் உண்டனர். இக் கருத்துக்களையே உமறுப்புலவர் இவ்வாறு வருணிக்கிறார்.

"சரியுந் திரைமுத் தெறிந்திரைக்குஞ்
   சலதிக் குபிரினி டையினடு
விரியு மமுத மெனுங்கலிமா
   மேலோ ரொருமுப் பஃதுடன்முன்
றரியீ மகடு வறுவரும
   றரச ரொருவ ரவனியிற்
றெரியு மிலக்க மிந்நான்கு
   பதின்ம ருடனுஞ் சிறந்திருந்தார்’’[2]

உமறுப்புலவர் மற்றொரு செய்யுளில் பிறிதொரு உருவகக்கை அமைத்தள்ளார். குற்றம் அற்றது. தீனுல் இன்

  1. 1. சீறா தீனிலை கண்ட படலம் 162
  2. 2. சீறா. உமறு கத்தாபு ஈமான் கொண்ட படலம் 95