பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

288


லாம் என்னும் மார்க்கம் இந்த மார்க்கம். இந்த மார்க்க நிலைமைக்கு உரித்தான அழகிய பயிர்தான் கலிமா, இதனையே கவிஞர்,

"செயிரறுந் தீனிலைக் குரிய செவ்விய
பயிரென வருங்கலி மா............" [1]

என இவ்வாறு பாடியுள்ளார். வேறொரு செய்யுளில் கலிமாவை சூரியனுக்கும் காபிர்களை (முஸ்லிம் அல்லாதோரை) இருளுக்கும் உவமித்து சூரியன் இருளை அகற்றுவதுபோல கலிமா முஸ்லிம் அல்லாத தன்மையை நீக்கி விடுகிறது என புலவர் இவ்வாறு கூறுகிறார். நபிகள் கோமான் இவ்வாறு செய்ததாக வருணிக்கிறார்.

"இரவியென்னுங் கலிமாவிற் குபிர்த்தமிர
மடர்ந்தெறியும்.........'[2]


திமிஸ்கு நாட்டைச் சேர்ந்த ஹபீபு ராஜா மக்க மாநகருக்கு வந்துவிட்டுத் தம் நாட்டுக்குத் திரும்பிச் சென்றார். அங்கு,செல்லும் பொழுது அவரது பரிவாரங்களின் சத்தம் ஒர் அலாதியானதாக இருந்தது. யானைக் கூட்டங்களின் சத்தம் ஒஜ பக்கம். சோலையில் வளரா நிற்கும் குதிரைக் கூட்டங்களின் சத்தம் மற்றொரு பக்கம். இனிய கீதத்தை கொண்ட முரசுகளின் நாதம் பிறிதொரு பக்கம். அத்தோடு தீனுல் இஸ்லாம் மார்க்கத்தின் மூல மந்திரமான கலிமாவை இனிமையுடன் ஒதிய ஓசை இன் னொரு பக்கம். இந்தச் சத்தங்கள் அனைத்தும் கடலில் ஒசையை ஒத்திருந்தது எனக் கவிஞர் இவ்வாறு வருணிக்கிறார்,

"கரித்திர ளொலித்தகம் பலையுங் காவளர் பரித்திர ளொலித்தகம் பலையும் பண் முர

  1. 1. சீறா. உடும்பு பேசிய படலப் 2
  2. 2. சீறா. உத்துபா வந்த படலம் 19