பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24


ஏழாம் நூற்றாண்டு உலக வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்பமாக அமைந்தது. மனித வாழ்க்சையில் ஒவ்வொரு துறையிலும் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகளை, அற நெறிகளைப் போதிக்க வந்த அண்ணல் நபி பெருமானார் பிறந்த நூற்றாண்டு அது அப்பொழுது தென்னிநதியக் கடற்கரைகளுக்கு வந்த அரபு நாட்டு வணிகர்கள் வியாபாரப் பொருள்களை மட்டும் சுமந்து செல்பவர்களாக இங்கு வரவில்லை. இஸ்லாமிய அறநெறிகளை வாழ்ந்து காட்டும் பிரதிநிதிகளாகவும் அவர்கள் மாறியிருந்தனர்.

"அல்லாஹ் நீள்கடலையும் உங்களுக்கு வசப்படுத்தி தந்திருச்கிறான். அவன் கட்டளையைக் கொண்டு, அதில் கப்பலில் சென்று அவனுடைய அருளைப் பேற்றுக் கொள்கிறீர்கள். (இதற்காக) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக! இன்னும் வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றையெல்லாம் உங்சளுக்கு வசப்படுத்தித் தந்திருக்கிறான். சித்தித்து உணரும் மக்களுக்கு இதில் பல சான்றுகள் இருக்கின்றன (45:12-12 என்னும் இறை மறையின் திருவாசகம் அவர்களுக்கு ஊக் கத்தைக் கொடுத்தது.

தித்திக்கும் திருமறையைக் கையிலேந்தி, மக்களின் தேவைக்கு வேண்டிய பொருள்களையும் சேகரித்துக்கொண்டு ஆழ்க்கடலில் கலம் செலுத்தி, அழகுத் தமிழ்நாட்டுக்கு வந்த அன்றைய அரபு நாட்டு முஸ்லிம்கள் தாம் இஸ்லாத்தின் செந்நெறிகளை இந்நாட்டிலே பரப்பியவர்கள், அந்த வர்த்தகர்களின் வாய்மையும் அவர்கள் கொண்ட நேர்மையும் தமிழ் மக்களைப் பெரிதும் கவர்ந்தன.

மத்திய கிழக்கு நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாகப் பல அரபு முஸ்லிம் குடும்பங்கள் தமிழகத்தில் குடியேறின. தமிழக மன்னர்கள் இவர்களுக்கு நல்வரவு நல்கி மானியங்கள் அளித்துச் சிறப்பித்தனர்.

சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் போர்ப்படைகளிலும் கணிசமான அளவுக்கு இம்முஸ்லிம்கள் இடம் பெற்றிருந்தனர். மைசூரை ஆண்டு வந்த ஹொய்சாள மன்னன் வீர வல்லாளனிடமும் அறுபதினாயிரம் முஸ்லிம் வீரர்கள்