பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

298


எனக் குறிப்பிட்டுள்ளார். அல்லாஹாத்த ஆலா முஸ்லிம்களுக்குப் பறுளென விதித்துள்ள தொழுகையைக் குறிப் பிடும் பொழுது உமறுப்புலவர்,

"பழுதி லாதமெய் முதல்வன் பறுளெனப் பணியுந் தொழுகை................."[1]

என விவரித்துள்ளார். அல்லாஹாத்த ஆலாவை பறுளின் விதிமுறைகளுக்கிணங்க தொழுதமையை வேதமுள்ளுறைந்த நாயனை பறுளின் விதிமுறைத் தொழுகையை முடித்து' (ககுபு வதைப்படலம் 58) எனக் கவிஞர் விவரித்துள்ளார், றம்ளான் மாத இறுதியில் நோன்பு நோற்று முடியும் சந்தர்ப்பத்தில் மற்றொரு இறைமறை வசனம் அண்ணல் நபி (சல்) அவர்களுக்கு இறங்கியது. இதற்கிணங்க முஸ்லிம்களுக்கு பித்றா வழங்கல் விதியாக்கப்பட்டது, பர்ளாக்கப்பட்டது.

"மூதலவன் விதித்த விறமளா னோன்பு
    முடிவினி லியாவரு மறிய
அதிசயம் பிறப்பப் பித்துறாப் பறுளென்
    றாயத்தும் நபிக்கிறங் கியதான்".[2]

என பித்றா குறிப்பிடப்படுகிறது. இதுவே முஸ்லிம்கள் மத்தியில் ஸதக்கத்துல் பித்ர் என வழங்கப்படுகிறது. றம்ளான் மாதம் முஸ்லிம்கள் நோன்பு நோற்று முடிந்ததும் வழங்கும் தான தருமத்தையே இச்சொற்றோடர் குறிப்பிடுகின்றது. இஸ்லாத்தில் ஆகுமானதாக்கப்பட்ட நெடுந்தூரப் பயணத்தின்போது தொழுகைகளைச் சுருக்கித் தொழுதல் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சுருக்கித் தொழுவது அறபில் 'கஸ்'ர் என வழங்கப்படுகிறது. இத் தொழுகை பறுளாக்கப்பட்ட வரலாறும் சீறாப்புராணத்

  1. 1.சீறா பதுறுப் படலம் 11, 256
  2. 2.சீறா பதுறுப் படலம் 11, 256