பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

301


"...............நா
மிகைத்த ஹஜ்ஜின் முகம்மதின் வீரத்தைத்
தகைத்தல் வேண்டுவ துண்டெனச் சாற்றுவார்". [1]

என்றும்

"இத்த லத்தினி லிவ்வரு டத்தினின்
மொய்த்த ஹஜ்ஜின் முகம்மது வஞ்சினைப்
பித்த னென்று பெரும்பெயர் நாட்டுதல்
யுத்தி யென்றித மித்தனர் பொய்மையோர்" [2]

இவ்வாறு வருணித்துள்ளார். அலைகளால் சூழப்பெற்றது இந்த உலகம். இதன் நடுமையமாக அமைந்திருப்பது மக்க மாநகரம். உலகின் அணிகலனாகவும் திலகமாகவும் உயிர் நாடியாகவும் அமைந்துள்ளது மக்கா. இத்தகைய மக்காவிலே ஹஜ்ஜினை நிறைவேற்ற மதீன மாநகரிலிருந்து பயணிகள் வந்திருந்தனர். இக்கருத்துக்களையே ஆசிரியர் இவ்வாறு பாடுகிறார்.

"பாய்திரை பரவை சூழ்ந்த படிக்கணி திலதமாவி
யாயமக் காவின் ஹஜ்ஜி லணிபெற வைம்பத் தாறு
தேயுமா னிடருங் கண்ட திரளொடு மதீன மெனுந்
தூயமா நகரந் தோறும் வந்தனர் துலக்க வன்றே".[3]

நபிகள் பெருமானார் முகம்மது (சல்) அவர்களுக்கு நபிப் பட்டம் அருளப்பெற்று பதின்மூன்று ஆண்டுகள் கழிந்த பின்னர் எல்லோரும் ஹஜ்ஜினை நிறைவேற்ற ஒன்று கூடினர் என்பது,

'உயர்புகழ் முகம்மதுக் கும்பர் கோனபிப்
பெயரளித் தாண்டுபன் மூன்று பேர்பெற
நயமுற நடக்குமந் நாளில் ஹஜ்ஜினுக்
கியல்பெற யாவரு மீண்டினாரரோ" [4]

  1. 1.சீறா. தீனிலைக் கண்ட படலம் 74, 78
  2. .2.சீறா. தீனிலைக் கண்ட படலம் 74, 78
  3. 3.சீறா. மதீனத்தார் மான் கொண்டபடலம் 1, 3,
  4. 4.சீறா. மதீனத்தார் மான் கொண்டபடலம் 1, 3,