பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

306


அண்ணல் நபி (சல்) அவர்கள் தாங்கள் கற்றவற்றைத் தங்கள் வாழ்க்கைத் துணைவியார் கதீஜா (றலி) அம்மையார் அவர்களுக்குப் போதித்தார்கள். உலுச் செய்யும் முறைமையையும் தொழுகையை நிறைவேற்றும் விதத்தினையும் நபிகள் பெருமானார் விளக்கியவாறே கதீஜா (றலி) அவர்களும் செய்தார்கள். இந்த விவரம் சீறாப்புராணத்தில் இவ்வாறு அமைந்துள்ளது.

"நரையார் கூந்தற் கதீஜாவை நண்ணி யுலுவும் வணக்கமுமுன்
முறையா யுரைப்ப வுரைத் தபடி முடித்தார் கனகக் கொடித்தாயே
வேதத்திலே கூறப்பட்டுள்ளது என்பதனை விளக்க," [1]

"ஆரணத் துலு" [2]

என்றும் அல்லாஹ்வைத் தொழுவதற்காக அவனை நினைத்து சரீர சுத்தி செய்தமையை குறிப்பிட,

"........ ...பொருவி லானை
நினைத்துலுச் செய்து.........." [3]

என்றும் அந்தகன் ஒருவனுக்கு உலுச் செய்யும்படி பெரு மானார் (சல்) அவர்கள் கட்டளை இட்டமை,

"...............................நீ
யொல்லை யிற்சென் றுலுச்செய்து...". [4]

என்றும் இந்தக் கட்டளையைப் பெற்ற அந்த அந்தகன் அன் வாறே உலுச் செய்தமை,

“... ...................அந்தகன்
சிந்தையார மகிழ்ந்துலுச் செய்து". [5]

  1. 1.சீறா தொழுகை வந்த வரலாற்றுப் படலம் 39
  2. 2.சீறா.தீனிலைக் கண்ட படலம் 4
  3. 3.சீறா.தீனிலை கண்ட படலம் 9
  4. 4.சீறா.அந்தகன் படலம் 3
  5. 5.சீறா.அந்தகன் படலம் 5