பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

318


என வருணிக்கிறார். இங்கே குத்துபா என்று சொல்லும் பொழுது வெள்ளிக்கிழமை நாட்களில் நடைபெறும் ஜும்ஆத் தொழுகையையே காட்டுகின்றது. முஸ்லிம்களின் பேச்சு வழக்கிலும் குத்துபா என்று கூறும்பொழுது அது ஜூஆத் தொழுகையையே குறிப்பிடுகின்றது. இஸ்லாமின் வரலாற்றிலே நிகழ்ந்த இரண்டாவது முக்கியத்துவம் பெற்ற போர் உகுத் என்னும் தலத்தில் நடைபெற்றது. இந்தப் போருக்காக ஷவ்வால் மாதப் பதினாலாம் நாள் வெள்ளிக்கிழமை குத்துபாத் தொழுது பின்னர் வேதம் ஒலிப்பதனால் தீது அற்றுப் போகும் வண்ணம் அண்ணல் நபி (சல்) அவர்கள் எழுந்தார்கள். இதனையே உமறுப்புலவர்,

"பேத மற்றஷவ் வாலென வுரைத்திடும் பெரிய
மாத மேழிரண் டினில் வெள்ளி வாரத்தின் வணங்கி
யோது குத்துபாத் தொழுதபின் மறையிய மொலிப்பத்
தீத றும்படி யெழுந்தனர் ஹபீபெனுஞ் செம்மல்," [1]

என வருணித்துள்ளார். வெள்ளிக்கிழமை நாளில் வள்ளல் நபி (சல்) அவர்கள் குத்பா ஓதியமை பற்றி உமறுப் புலவர்,

"கீர்த்திசேர் வள்ளல் வெள்ளிக்கிமையிற் குத்து பாவி லார்த்தெழுந் தோதி மின்ப ரதனிடை யிருக்கும் போதில்." 2

என்றும் குறிப்பிட்டுள்ளார், மழையழைப்பித்த படலத்தில் உள்ள இரண்டாம் செய்யுளில் மின்பர் என்னும் அறபுச் சொல்லையும் உபயோகித்துள்ளார். குத்பா ஓதப் பயன்படுத்தப்படும் இருக்கை, ஆசனம், பீடம், மின்பர் என

  1. 1.சீறா உகுதுப் படலம் 77