பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

324


னால்" என்றும் அந்தகன் படலத்திலும் (4, 6) பறக்கத் என்னும் அறபுச் சொல் இடம் பெற்றிருப்பதைக் காணலாம் ஆயிஷா (றலி) நாயகி அவர்களின் திருவருளினால் என்பதைக் குறிக்க வந்த கவிஞர் பறச்கத் என்னும் சொல்லை 'மயிலாயிஷா பறக்கத்தென நபி கூறினர் மாதோ’ என்று முறை சீக்குப் படலத்தில் (41) பயன்படுத்தியுள்ளமையைக் காண லாம்.

திருக்குர்ஆன் வாக்கியங்கள்-திருமறை வசனங்கள் ஆயத்துச்கள் என வழங்கப்படுகின்றன. ஆயத் என்னும் சொல் திருக்குர் ஆனிலே (2.99, 129) இடம் பெற்றுள்ளது. அல்லாஹ்விடமிருந்து நபிகள் பெருமானார் (சல்) அவர் களுக்கு வேத வசனம் இறங்கியது என்பது 'இறைவனாயத் திறங்கியது' என்று தீனிலைப் படலத்தில் (110) இடம் பெற்றுள்ளது. அதே படலத்தில் ஆயத் என்னும் சொல் (119) வந்துள்ளது. அச்சொல் இடம் பெற்றுள்ள ஏனைய செய்யுட்களாவன: பதுறுப் படலம் 1, 102, 256, சவீக்குப் படலம் 4, அபீறாபிகு வதைப் படலம் 12 சுகுறாப் படலம் 17, தாத்துற்றஹாக்குப் படலம் 21, பனிகுறைலா வதைப் படலம் 21. லுமாம் ஈமான் கொண்ட படலம் 2, செயிணபு நாச்சியார் கலியாணப் படலம் 8, 9, 10, 27, 29, கவுலத்தை விட்டுக் கூடின படலம் 11, 13, உமுறாவுக்குப் போன படலம் 112 உறனிக்கூட்டத்தார் படலம் 12, 13, திருக்குர் ஆனின் அத்தியாயங்கள் சூறாக்கள் என வழங்கப்படுகின்றன. திருக்குர்ஆனிலும் (2:23) இச்சொல் வந்துள்ளது. அல்லாஹ்விடமிருந்து அத்தியாயங்கள் நபி முகம்மது (சல்) அவர்களுக்கு இயங்கியமை பற்றிக் குறிப்பிடுகையில் உமறுப் புலவர்,

"நிலஞ்சூழ் பரவைப் புறப்புவியு மிறைஞ்ச நெடியோன் றிருவருளாற்
செலும்கு றத்தில் முஸம்மிலெனுஞ் சுருதி வசன மிறங்கினவே." [1]

  1. 1. சீறா தொழுகை வந்த வரலாற்றுப் படலம் 36