பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

326


என விவரிக்கிறார். உள்ளத்திலே உள்ள கள்ளங் கபடங்கள் அகற்றப்பட்டமை 'கல்பினிற் கசடு நீத்து' (மதீனத்தார் ஈமான் கொண்ட படலம் 7) என்றும் சகுது (றலி) அவர்களின் இருதயம் என்பதைக் குறிக்க,

"...சகுது கல்பினில்......" [1]

மதீனத்தார் ஈமான் கொண்ட படலம் (65) என்றும் நபிகள் பெருமானாரின் பொன்மொழிகளை உள்ளத்தில் கொண்டனர் மதீனா வாசிகள் என்பதனை,

'மல்வளர் புயமுகம் மதுதம் வாய்மொழிக்
கல்பினி விருத்தி........................" [2]

என்றும் கல்பு என்னும் அறபுச் சொல் ஆளப்பட்டுள்ள மையைக் காணலாம்.

குர்பானி என்பது மற்றொரு அறபுச் சொல். தியாகம் புரிதல் என்பதனைச் சுட்டுவதாக இந்தக் குர்பானி என்னும் சொல் அமைந்துள்ளது. திருக்குர்ஆனிலே கருத்தில் குர்பாணி என்னும் சொல் வந்துள்ளது (3:182; 5:30) 'விந்தையாய் குர்பான் செய்ய' என்றும் தேய்தோர் புகழவொட்டை யறுத்துதற் குறுபான் செய்த’ என்றும் உம்முறாவுக்குப் போன படலத்தில் வந்துள்ளமை நோக்கற் பாலது.

முஸ்லிம்களின் பேச்சு வழக்கில் சருவ சாதாரணமாக உபயோகிக்கப்படும் சலாம் என்னும் அரபுச் சொல். இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய தமிழ் இலக்கியத்திலும் பெரு வழக்கைப் பெற்றுள்ளது. முதலில் சலவாத் என்னும் சொல்லை எடுத்துக் கொள்வோம், (திருக்குர்ஆன் 2:157 238) ஹவ்வா (அலை) அவர்கள் ஆதம் (அலை) அவர்களிடம் மகர் கேட்க இந்த விவரத்தை அல்லாஹ்விடம் ஆதம் (அலை

  1. 1. சீறா. மதீனத்தார் ஈமான் கொண்ட படலம் 65
  2. 2. சீறா. மதீனத்தார் வாய்மை கொடுத்த படலம் 40