பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

327


முறையிட முகம்மது நபி (சல்) தம் பேரிற் சலவாத் பத்து முறை ஓதி அதனை மகராகக் கொடுக்கும்படி அல்லாஹ் கட்டளை இட்டான். இதனையே உமறுப்புலவர்,

".............................. என்றன்
மகரினைத் தருக பின்னர் வருகவென் றுரைத் திட்டாரே",[1]

"கேட்டனர் மகரென் றாதங் கிலேசமுற் றிறை பாற் கெஞ்சி
வாட்டமில் லவனே யெந்த வகைமகர் கொடுப்ப தென்றார்
நாட்டிய புகழ்சேர் மக்க முகம்மது நபிதம் பெரிற்
சூட்டிய சலவாத் தீரைந் துரைமென விறைவன் சொன்னான்." [2]

"மதிக்கதிர் விலக்குஞ் சோய் முகம்மதின் சலவாத் தோதி." [3]

இங்கே வந்துள்ள மகர் என்னும் அறபுச் சொல்லை பின்னர் எடுத்துக் கொள்வோம். சலவாத் என்னும் பதம் 'மிகுந்திடும் வரிசை நபிசலவாத்தை' தலைமுறைப் படலம் (32) என்றும், 'பன்னிய சலவாத் தோதியே வாழ்த்தி...' நபிய வதாரப் படலம் (117) என்றும் 'வானவர் புகழ்தர வருஞ் சல வாத்தை' விடமீட்ட படலம் (34) என்றும், தானவன் பெயரின் வண்ணப் பயித்தொடுஞ் சலவாத் தோதி' 'பாத்திமா திருமணப் படலம்' (186) என்றும் 'தேன்மழை" பொழிந்தென நபிசல வாத்துப் பொங்கவே' மதீனம் புக்கப் படலம் (56) என்றும் எல்லா ஓசைகளையும்விட சலவாத்தின் ஓசை மிகுந்து வானளாவ ஒலித்தது என்பது தொனிக்க,

  1. 1. சீறா தலைமுறைப் படலம் 21
  2. 2. சீறா. தலைமுறைப் படலம் 22
  3. 3. சீறா. தலைமுறைப் படலம் 23