பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

330


(மானுக்குப் பிணைநின்ற படலம 64 என்றும் 'இறையவன் சலா முறைத்து' (பருப்பதராஜனைக் கண்ணுற்ற படலம் 21 ) என்றும் 'ஒடுங்கி நின் றொருசலா முரைத்து! (பருப்பத ராஜனைக் கண்ணுற்ற படலம் 27) என்றும் 'விள்ளுதற் கரிதா யொருசலாங் குழறி' (காம்மாப் படலம் 30) என்றும் 'குறைவறச் சலாமெடுத் துரைத்து' (காம்மாப் படலம் 30) என்றும் 'ஓதிக் கையெடுத் துற்றச லாமுரைத்து' (விருந்தூட்டுப் படலம் 8) என்றும் முறைமை யின்சலா முரைத்து’ (விட மீட்ட படலம் 27) என்றும் இதத்தோடு சலாமுங் கூறி' (கபுகாபுப் படலம் 4) என்றும் 'விருப்போடு சலாமுஞ் சொன்னார்' (கபுகாபுப் படலம் 5) ஒல்லையினிழிந்த னாதி யோதிய சலாமுங் கூறி (கபுகாபுப் படலம் 82) என்றும் "மனமகிழ் தரசலா முரைத்து (உகுபான் படலம் 55) என்றும் 'என்சலா முரைமினென’ (சல்மான் பாரிசுப் படலம் 21) என்றும் 'வண்மை முகம்மதே சலாமென்றோதி (பாத்திமா திருமணப் படலம் 30) என்றும் பரிவினின் சலாமுங் கூறி (பாத்திமா திருமணப் படலம் 37) என்றும் "இன்டக் கட்டுரை சலாமுங் கூறி (பாத்திமா திருமணப் படலம் 39) என்றும் 'நவ்விமுன் னெதிர்ந்து பேச நாயக சலாமென் றோதி' பாத்திமா திருமணப் படலம் 48) என்றும் 'தருமுகம் மதுவுக் கின்ப சலாமெடுத் துரைத்து: (பாத்திமா திருமணப் படலம் 183) என்றும் 'சலாமென் றோதினார்’ (பாத்திமா திருமணப் படலம் 202) என்றும் சுந்தரம் பெறசலாஞ் சொல்லி' அசீறாப் படலம் 38) என்றும் 'சலாம் பகர்ந்தது' (அசீறாப் படலம் 35) என்றும் 'பிரியமுற் றொருசலா மோதி’ (அசீறாப் படலம் 40) என்றும் சலாஞ் சொலி' (பனீ குறைலா வதைப் படலம் 53) என்றும் 'முந்த வென் சலாஞ்சொ லென்று மொழிந்தன் தன்னை ஏவ 'செயினபு நாச்சியார் கலியாணப் படலம் 18) என்றும் "ஓங்குகின்ற சலாமுறைத்து' (அந்தகன் படலம் 9) என்றும் அமைந்துள்ளது. தொழுகையை முஸ்லிம்கள் சலாம் சொல்லி முடிப்பர். 'அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்