பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

 ராக மதித்து விஜயரகுநாதப் பெரிய தம்பி என்ற பட்டத்தையும் சேக்சாதிக்க அளித்து மன நிறைவு பெற்றார்.

ஆழ்ந்த சமயப் பற்றுக்கொண்டிருந்தவர் சீதக்காதி. அக்காலத்தில் மெய்ஞானப் பெருங்கடலாக, சகலகலா விற்பன்னராக விளங்கிய சதக்க துல்லாஹ் அப்பா அவர்கள் என்ற மேதையின் ஆத்மீகச் சீடராக இருந்தார் உலகத்துக்கோர் அருட்கொடையாக வந்த உத்தம போதகர் முஹம்மது நபி (சல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு வளமார் காப்பியமாகத் தமிழில் அமையவேண்டும் என்று வேணவாக் கொண்டு, அதற்குத் தகுதி படைத்த கவிஞரைத் தேடிக் கொண்டிருந்தார் சீதக்காதி புலவர் உமறின் நட்பு. பரவ லர் சீதக்காதிக்குக் கிடைத்ததும் இப்பொறுப்பு முழுவதையும் அவரிடமே ஒப்படைத்தார்

ஆனால் உமறின் காப்பியப் பணி நிறைவு பெறும் நேரத்தில் சீதக்காதி உயிரோடிருக்கவில்லை சீறா சிறப்புற எழுதி முடிப்பதற்கு அருந்துணை புரிந்தவர்களில் ஷெய்கு சதக்கத் துல்லாஹ் அப்பா மஹ்முது பந்தர் (பரங்கி பேட்டை), மாமு நனார் லெப்பை, அபுல் காசீம் மரைக்காயர் ஆகியோர் முக்கியமானவர்கள் .

சீறாப்புராணத்தின் இறுதிப் பகுதி முடிவதற்குள் புலவர் உமறும் காலமாகிவிட்டார். இதற்கு முப்பது ஆண்டுகளுக் குப் பின்னர் பனு அஹ்மது மரைக்காயர் என்னும் பெரும் புலவர் 1826 பாடல்கள் யாத்து நூலை முழுமை பெறச் செய்தார். இந்தப் பிற்பகுதி 'சின்னச் சீறா' என்று அழைக்கப் பெறுகிறது.

சீறாவின் காவிய நயத்தை நுகர்ந்த தமிழ்ப் பேரரறிஞர்கள், கவியழகில் அதனைக் கம்ப இராமாயணம், சீவக சிந்தாமணி போன்ற காப்பியங்களுக்கொப்ப மதித்துள்ளனர்.

காப்பியத்தின் தொடக்கத்தில் புலவர்கள் அவையடக்கம் கூறுவதுண்டு. தாங்கள் வரையப்புகுந்த பாட்டுடைத் தலைவர் முன்னும், புலவர்கள் முன்னும், தங்களுடைய தகுதி எவ்வளவு குறைந்ததென்று கூறித் தங்கள் பணிவைச் சுட்டிக்