பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

335


பந்தம் சம்பந்தமான சமயக் கிரியைகளில் மணமகன் விவாக ஒப்பந்தத்தினை ஏற்றுக் கொண்டமைக்கு அறிகுறியாகக் கபீல் என்னும் இந்த அறபுப் பதத்தை உச்சரித்தல் வேண்டும், ஏற்றுக்கொள்ளுதல் என்பதனைக் குறிக்க திருக் குர்ஆனிலே (3:7) கபூல் என்னும் சொல் வந்துள்ளது, அடியார்களால் அல்லாஹூத் தஆலாவிடம் கேட்கப்படும் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்று நிறைவேற்றுதலும் கபூலாக்கல் என்றே வழங்கப்படுகிறது. கல் என்னும் அறபுச் சொல் தூதென வுதித்த முகம்மதின் து ஆவைத் துய்யவனுறக் கபூ லாக்க' (தசைக் கட்டியைப் பெண்ணுரு வாக்கிய படலம் 15) என்றும் 'இருக்கையேத் தருந்து ஆ விரப்பவினி திறை யவன்க பூ லாக்க (உகுபான் படலம் 7) என்றும் இரந்த வெல்லா முறக் கபூ லாய தன்றே'. (பாத்திமா திருமணப் படலம் 28) என்றும் பேரருட் கபூல் (பாத்திமா திருமணப் படலம் 51) என்றும் "மறுவறக் கபூல்செய் தேன்’ (பாத்திமா திருமணப் படலம் 59) என்றும் சீறாப்புராணத்தில் ஆளப்பட்டுள்ளதைக் காணலாம்.

கபூலாக்கப்படுவது-ஏற்றுக் கொள்ளப்படுவது துஆ-பிரார்த்தனை மாத்திரம் அன்று அடியவர்களின் பாவ மன்னிப்பும் அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்படுவதற்குரியதாகும். பாவமன்னிப்பு அறபு மொழியில் தவ்பா எனப்படுகிறது. தவ்பாச் செய்தால் அல்லாஹ் அதனை ஏற்றுக் கொள்வான். கபூல் செய்வான். திருக்குர்ஆனிலும் தவ்பா (41:25) குறிப்பிடப்படுகிறது. அல்லாஹ்விடம் ஆதம் (அலை) அவர்களும் தவ்பா செய்தார்கள். அல்லாஹ் வும் அந்தத் தவ்பாவினை ஏற்றுக் கபூல் செய்தான். ஆதம் (அலை) அவர்களும் ஹவ்வா (அலை) அவர்களும் தவ்பாகபூல் செய்யப்பட்டதன் பலனாக அறபா மலையில் ஒன்று கூடினார்கள். இக்கருத்துக்களே.