பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

343

பக்கீர் __ தமிழில் இச்சொல் பக்கீறு என்றும் வழங்குகிறது. ஊர் சுற்றித் திரிபவர் என்பதையும் குறிக்கும். இவர்கள் துறவிகள் போல் காட்சி அளிப்பர். திருக்குர்ஆன் 3:181, 4:6 பாத்திமா திருமணப் படலம் 197, 200, 204.
பயித்து __ இசையோடு பாடக்கூடிய அறபுப் பாடல் இவ்வாறு அழைக்கப்படுகிறது. திருமண விழாக்களில் ஓதப்படும் இவை மணப் பைத்துக்கள் என வழங்கப்படுகின்றன. பாத்திமா திருமணப் படலம் 109, பதுறுப் படலம் 248, கந்தக்குப் படலம் 48.
பலாய் __ கேடு என்னும் பொருளில் பேச்சு வழக்கிலும், இலக்கிய வழக்கிலும் பயன்படுத்தப்படுகிறது. திருக்குர்ஆனிலும் (2:49:14:6) இச்சொல் வந்துள்ளது. கடுஞ்சோதனை என்றும் இச்சொல் பொருள்படும். உம்மி மகுபதுப் படலம் 24.
பாரிசு __ பாரசீகம், ஒப்பெழுதித தீர்த்த படலம் 30. சல்மான் பாரிசுப் படலம் 4.
பிருதவுசு __ சுவர்க்கலோகம். உசைனார் பிறந்த படலம் 15.
மத்ஹப் __ இஸ்லாத்தில் உள்ள ஒரு பிரிவு. இமாம் ஒருவரால் நிறுவப்பட்ட பிரிவு. கடவுள் வாழ்த்து 15.
மலக்கு __ மலாயிக்கா என்னும் அமரர்களைக் குறிப்பிடுகிறது. தலைமுறைப் படலம் 15: மதியை அழைப்பித்த படலம் 151; பருப்பத ராஜனைக் கண்ணுற்றப் படலம் 221 செயினபு நாச்சியார் கலியாணப் படலம் 9, 10.