பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

350


கொண்டபின் பிரத்தி சொன்ன குதாதிரு வசன நோக்கி
யண்ட நாயகனைப் போற்றி யாதமென் றுரைப்பதானார்." [1]

ஜிபுரீல் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைப்படி முகம்மது நபி (சல்) அவர்களுக்கு நபிப் பட்டம் அருளப் பட்டமையை அண்ணல் நபி (சல்) அவர்களுக்கும் அறிவித்ததை உமறுப்புலவர் இவ்வாறு பாடியுள்ளார்.

"மண்டலம் புரக்குஞ் செங்கோல் முகம்மதின் வதன நோக்கி
விண்டலம் பரவும் வேத நபியென்னும் பட்ட நும்பாற்
கொண்டலே குதாவின் றீந்தா னெனுமொழி கூறி " [2]

இங்கே குதா என்னும் அல்லாஹ்வைக் குறிக்க உபயோகிக் கப்பட்டிருப்பதைக் காணலாம். மற்றொரு சந்தர்ப்பத்தில் அல்லாஹ்வின் தனித்தன்மைகள் வருணிக்கப்பட்டுள்ளன. நபிகள் நாயகம் (சல்) அவர்கள் அடிக்கடி அல்லாஹ்வைப் புகழ்ந்து கொண்டிருந்தார்கள் என்பதனை வருணிக்க வந்த உமறுப்புலவர் அங்கும் குதா என்னும் பாரசீகச் சொல்லைப் பயன்படுத்துகிறார்.

"ஆதிநா யகனே யழிவிலா தவனே
   யளவருந் திடற்கரும் பொருளே
சோதியே யெவையி னுவமையில் லவனே
   தொடரின்ப துன்பமற் றவனே
நீதியே குபிரர் தெளிதரு ம்படியா
   னினைத்தவை முடித்திடென் றுருகித்

  1. 1. சீறா தலைமுறைப் படலம் 10
  2. 2. சீறா நபிப்பட்டம் பெற்ற படலம் 21